23rd NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அனாஹத் சிங்
- 79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் டெல்லியின் தன்வி கண்ணா மற்றும் அனாஹத் சிங் மோதினர்.
- போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தன்வி கண்ணா விலகியதால் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார். அனாஹத் சிங் 15 வயதில் தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
- ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர்கள் தலைமையகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இடையே பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023, நவம்பர் 23 அன்று புதுதில்லியில் கையெழுத்தானது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் , பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைப் பணியாளர் குழுவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ , அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் (டி.எஸ்.ஐ.ஆர்) செயலாளர் டாக்டர் என்.கலைச்செல்வி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- இந்தியப் பாதுகாப்பு பணியாளர் தலைமையகம், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி குழும ஆய்வகங்கள், இந்திய பாதுகாப்பு பணியாளர்கள் தலைமையகம் மற்றும் ஆயுதப்படைகளான இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவற்றுக்கு இடையே கூட்டுத்தொடர்புகளைத் தொடங்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்தர் குமார், துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இஸ்கான் மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் புதுதில்லியில் போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டம் சர்வதேச கிருஷ்ண உணர்வு சங்கம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இஸ்கான் உடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் போன்றோரிடையே போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின் செய்தியைப் பரப்ப உதவும்.
- இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தைக் குறைப்பது மட்டுமின்றி அதனை நிரந்தரமாக நிறுத்துவதும் ஆகும்.