Type Here to Get Search Results !

கரியமில வாயு வெளியேற்றம் தொடா்பான ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் அறிக்கை 2023 / UN on carbon emissions Report of the Department of Environmental Planning 2023

  • கரியமில வாயு வெளியேற்றம் தொடா்பான ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் அறிக்கை 2023 / UN on carbon emissions Report of the Department of Environmental Planning 2023: பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த வாரம் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, இது தொடா்பான அறிக்கையொன்றை ஐ.நா. வெளிட்டுள்ளது.
  • ‘கரியமில வாயு வெளியேற்றம் தொடா்பான ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் அறிக்கை’ என்று பெயரிடப்பட்டுள்ள அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
  • வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பம் தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸ் (2.7 டிகிரி ஃபாரன்ஹீட்) மட்டுமே கூடுதலாக இருக்கும் அளவுக்கு புவி வெப்பமேற்றத்தைக் கட்டுப்படுத்த கடந்த 2015-ஆம் ஆண்டில் சா்வேதச ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • ஆனால், அந்த இலக்கை அடையும் வகையில் வெப்பமேற்றம் குறைக்கப்படுவதற்குப் பதிலாக அதிகரித்துதான் வருகிறது. இந்த நிலை நீடித்தால், 2030-ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பம் தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 2.5 முதல் 2.9 டிகிரி செல்ஷியஸ் வரை (4.5 - 5.2 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமாக இருக்கும்.
  • உலகின் வெப்பம் அந்த அளவுக்கு அதிகரித்தால், அது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும். அதற்கான அறிகுறிகளை உலகம் இந்த ஆண்டே வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது.
  • 2015-ஆம் ஆண்டின் பருவநிலை ஒப்பந்த இலக்கை (2030-க்குள் 1.5 டிகிரி செல்ஷியஸ்) எட்டுவதற்கு உலக நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தை 42 சவீதம் குறைக்க வேண்டியுள்ளது.
  • ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை எரித்ததன் மூலம் நாடுகள் காற்றில் கலந்த கரியமில வாயுவின் அளவு 1.2 சதவீதம் அதிகரித்துதான் உள்ளது.
  • இதன் காரணமாக, உலகின் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பா் மாத நிலவரப்படி உலகின் சராசரி ஒரு நாள் வெப்பநிலை 127 நாள்களுக்கு தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸை விடக் கூடுதலாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 17) மட்டும் உலகின் வெப்பமேற்றம் 2 டிகிரி செல்ஷியஸை (3.6 டிகிரி ஃபாரன்ஹீட்) தொட்டதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.
  • வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்கள்தான் பூமியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உருவாகி தழைத்திருப்பதற்குத் தேவையான வெப்பத்தை சூரியனிடமிருந்து பெற்றுத் தருகின்றன.
  • ஆனால், 18-ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சி காரணமாக தொழிற்சாலைகளாலும் வாகனங்களாலும் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகம் கலந்ததால், சூரியனிடமிருந்து அதிக வெப்பம் ஈா்க்கப்படுகிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து, அதன் விளைவாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.
  • அந்த பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான மழை வெள்ளம், வெப்ப அலை, வறட்சி போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.
  • இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர ஐ.நா. மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 
  • அந்த ஒப்பந்தத்தில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உலகின் வெப்பநிலை உயராமல் கட்டுப்படுத்தவும், அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை படிப்படியாகக் குறைக்கவும் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்புக்கொண்டன.
  • இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாக மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
  • இந்த நிலையில், புவியின் வெப்பமேற்றம் குறைக்கப்படுவதற்குப் பதிலாக, கரிமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதால் மேலும் உயா்ந்து வருவதாகவும், 2030-க்கும் அது 2.9 செல்சிஷயைத் தொடும் ஆபத்து உள்ளதாகவும் ஐ.நா. தற்போது எச்சரித்துள்ளது.

ENGLISH

  • UN on carbon emissions Report of the Department of Environmental Planning 2023: A UN conference on climate change begins next week in the United Arab Emirates. Prior to that, a report on this was issued by the UN. exposed. UN regarding carbon emissions. Titled 'Report of the Environmental Planning Division', it states:
  • In 2015, the United Nations agreed to limit global warming to 1.5 degrees Celsius (2.7 degrees Fahrenheit) above pre-industrial levels by 2030.
  • But to meet that goal, warming is increasing rather than decreasing. If this trend continues, by 2030 the Earth will be 2.5 to 2.9 degrees Celsius (4.5 to 5.2 degrees Fahrenheit) warmer than pre-industrial levels.
  • If the world heats up that much, it will cause a huge disaster. The world has shown signs of that this year. To reach the 2015 climate agreement target (1.5 degrees Celsius by 2030), the world needs to reduce its carbon dioxide emissions by 42 percent.
  • However, in the last year alone, the amount of carbon dioxide in the air has increased by 1.2 percent due to the burning of coal, oil, and gas. Due to this, the temperature of the world is also increasing. As of last September, the world's average daily temperature was 1.5 degrees Celsius above pre-industrial levels for 127 days, the report said.
  • Last Friday (Nov. 17) alone, global warming reached 2 degrees Celsius (3.6 degrees Fahrenheit), experts said. Greenhouse gases, including carbon dioxide, in the atmosphere provide heat from the sun for plants and other organisms to thrive on Earth.
  • But due to the Industrial Revolution in Western countries in the 18th century, factories and vehicles put more carbon dioxide into the atmosphere, drawing more heat from the sun. This increases the temperature of the earth and as a result climate change occurs.
  • Due to the climate change, natural calamities such as excessive rainfall, floods, heat waves and droughts are increasing all over the world. In this situation, the annual UN conference held in 2015 in Paris, the capital of France, to control climate change. A historic agreement was struck at the conference. 
  • In that agreement, 195 countries, including India, agreed to limit global temperature rise to 1.5 degrees Celsius above pre-industrial levels by 2030 and to gradually reduce the amount of carbon dioxide in the atmosphere.
  • However, it is alleged that the measures are taken very laxly. In this situation, instead of reducing global warming, the increase in greenhouse gas emissions is increasing, and there is a risk that it will reach 2.9 Celsius by 2030. Now warned.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel