Type Here to Get Search Results !

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்சார் சமூக வல்லுநர் வேலைவாய்ப்பு 2023 / TAMILNADU PROFESSIONAL SOCIAL WORKER RECRUITMENT 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்சார் சமூக வல்லுநர் வேலைவாய்ப்பு 2023 / TAMILNADU PROFESSIONAL SOCIAL WORKER RECRUITMENT 2023

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்) தொழில்சார் சமூக வல்லுநர் பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்) உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் அரசு திட்டம். 

இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது.

இவ்வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் திட்ட செயல்பாட்டிற்காக அழகப்பபுரம், சேதுக்குவாய்த்தான், சுகந்தலை, கட்டாரிமங்கலம், கலியாவூர், மணக்கரை, கீழவல்லநாடு, கீழபுத்தனேரி, பூவானி, விட்டிலாபுரம், கோமனேரி, முதலூர், நெடுங்குளம், பிடானேரி, அமுதுண்ணாகுடி, கொம்பன்குளம் மற்றும் கோரம்பள்ளம் ஊராட்சிகளில் தொழில்சார் சமூக வல்லுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணியிடத்திற்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ள இளங்கலை பட்டம் பெற்றுள்ள மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம். 

இவ்விண்ணப்பதாரர் ஆண்ட்ராய்டு அலைபேசி வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்த தெரிந்தவராக இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவு தொடர்பான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், விண்ணப்பதாரர் மக்கள் அமைப்புகளின் நிர்வாகிகளாகவோ அல்லது பணியாளர்களாகவோ இருத்தல் கூடாது மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதியாகவோ இருத்தல் கூடாது. 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தங்களது ஊராட்சியில் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அல்லது வட்டார திட்ட மேலாண்மை அலகு – வாழ்ந்து காட்டுவோம் திட்டம் அலுவலகங்களில் 05.12.2023 ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப் படுகிறது.

மாவட்ட செயல் அலுவலர், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், 182, 2/5கு, பாளை ரோடு மேற்கு, வெற்றி வளாகம், தூத்துக்குடி. தொலைபேசி எண்: 0461 – 2902744 ஆகிய வட்டார அளவிலான அணித் தலைவர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel