புதுச்சேரி மாநில சரக்கு போக்குவரத்து கொள்கை 2023 / PUDUCHERRY STATE LOGISTICS POLICY 2023
TNPSCSHOUTERSNovember 23, 2023
0
புதுச்சேரி மாநில சரக்கு போக்குவரத்து கொள்கை 2023 / PUDUCHERRY STATE LOGISTICS POLICY 2023: புதுச்சேரி மாநில பொருளாதார வளர்ச்சிக்கு லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் ஒருங்கிணைந்த தளவாட உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவது மிக முக்கியம்.
குறிப்பாக மல்டிபிள் லாஜிஸ்டிக்ஸ் பார்க் என்படும் பலவகை தளவாடங்கள் ஒருங்கிணைந்த பூங்காக்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம், ஏற்றுமதி, இறக்குமதி பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.
எனவே, புதுச்சேரி மாநில பொருளாதார வளர்ச்சி முன்னெடுப்பிற்கான புதுச்சேரி ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பு, பல வகை லாஜிஸ்டிக்ஸ் பார்க், வார் அவுஸ் கொள்கை-2023யை மாநில அரசு தொழில் துறை மூலம் தற்போது உருவாக்கி வெளியிட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
புதுச்சேரி மாநில சரக்கு போக்குவரத்து கொள்கை 2023 / PUDUCHERRY STATE LOGISTICS POLICY 2023: சரக்கு போக்குவரத்திற்கான புதிய லாஜிஸ்டிக்ஸ் கொள்கையின்படி கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், சரக்கு டெர்மினல்கள், கஸ்டம் வசதிகள், டிரக் டெர்மினல்கள், வாகன ஓட்டிகள் தங்குமிடம் மற்றும் போர்டிங் வசதிகள் போன்ற பல வசதிகள் தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு போக்குவரத்து முறைகளை எளிதாக தேர்வு செய்ய முடியும்.
ஊக்கத் தொகை திட்டம்புதுச்சேரியில் லாஜிஸ்டிக்ஸ் உட்கட்டமைப்பினை ஏற்படுத்த முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது.
லாஜிஸ்டிக்ஸ் பார்க், மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க், வார் அவுஸ், ஜெட்டீஸ், உள்நாட்டு கண்டெய்னர் முனையம், ஏர் பிரைட் ஸ்டேஷன், டெர்மினல், ஏர் கார்கோ காம்ளக்ஸ், டிராக் முனையம் போன்ற உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்தால் முதலீட்டில் 15 சதவீதம் அதாவது 50 லட்சத்திற்கு மிகாமல் ஊக்கத் தொகை கிடைக்கும்.
ரிசர்வ் வங்கியின் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றிருந்தால் 25 சதவீத வட்டி மானியம் ஆண்டிற்கு 5 லட்சத்திற்கு மிகாமல், ஐந்தாண்டு வரை பெற முடியும்.
சப்சிடிக்கான குவாலிட்டி சர்ட்டிபிகேட் பெற்றிருந்தால் 50 சதவீதம் அதாவது ஒவ்வொரு சான்றிதழ்க்கும் 2 லட்சம் வரை பெற முடியும். காப்புரிமை செலவு அறிவு சார் சொத்துரிமைக்கான 50 சதவீதம் செலவினை புதுச்சேரி அரசு ஏற்க திட்டமிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டு காப்புரிமைக்கு 2 லட்சமும், வெளிநாடு காப்புரிமைக்காக 5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை பெறலாம்.
இதேபோல், லாஜிஸ்டிக் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தாலும் ஊக்கத் தொகை திட்டம் செயல்பட உள்ளது. 50 மணி நேர பயிற்சிக்கு ஒரு தொழிலாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் விதம் 20 பேருக்கு ஊக்கத் தொகை பெறலாம்.
100 மணி நேர பயிற்சிக்கு ஒரு தொழிலாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் 15 பேருக்கு ஊக்கத் தொகை பெறலாம்.200 மணி நேர பயிற்சி என்றால் ஒரு தொழிலாருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 10 பேர் வரை ஊக்கத் தொகை கிடைக்கும்.
லாஜிஸ்டிக்ஸ் உட்டமைப்பினை ஏற்படுத்தும்போது கட்டிங்ெஹஜ் தொழில்நுட்ப கருவிகள் கொள்முதலுக்கு 50 சதவீதம் செலவினை அதவாது 10 லட்சத்திற்கு மிகாமல் திரும்ப பெற முடியும்.
மாநிலத்தில் லாஜிஸ்டிக்ஸ் உட்கட்டமைப்பினை ஏற்படுத்த தொழில் துறை இயக்குநர் தலைமையில் மாநில லாஜிஸ்டிக்ஸ் மையம், தலைமை செயலர் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பு கமிட்டியும் விரைவில் ஏற்படுத்த உள்ளது.
ENGLISH
PUDUCHERRY STATE LOGISTICS POLICY 2023: For the economic development of Puducherry state, it is very important to establish integrated logistics infrastructures, especially multiple logistics parks.
Through this, the export and import will grow on a large scale. Therefore, for the economic development of Puducherry state, the Puducherry Integrated Logistics Infrastructure, Multi-type Logistics Park, War Out Policy-2023 has been developed by the State Government through the Industry Department.
Special Features
PUDUCHERRY STATE LOGISTICS POLICY 2023: According to the new logistics policy for freight transport, many facilities like warehouses, cold storages, cargo terminals, customs facilities, truck terminals, motorists accommodation and boarding facilities are to be set up with private participation.
This will enable exporters and importers to easily choose different modes of transport according to their needs. Incentive Scheme An incentive scheme is also being implemented for companies coming forward to set up logistics infrastructure in Puducherry.
Investment in infrastructure such as Logistics Park, Multi-modal Logistics Park, War Outs, Jetties, Domestic Container Terminal, Air Freight Station, Terminal, Air Cargo Complex, Track Terminal etc. percent i.e. incentive amount not exceeding 50 lakhs. In case of taking loan from RBI scheduled banks, financial institutions can get 25 percent interest subsidy not exceeding 5 lakhs per annum for up to five years.
In case of getting Quality Certificate for Subsidy 50 percent i.e. up to 2 lakhs for each certificate. The Puducherry government plans to bear 50 percent of the cost of intellectual property rights. 2 lakhs for domestic patents and Rs.5 lakhs for foreign patents.
Similarly, the Incentive Scheme is operational even for training logistic workers. 5000 rupees per worker for 50 hours of training can get incentive for 20 workers. For 100 hours of training, one worker can get an incentive of Rs 10,000 for 15 people.
For 200 hours of training, up to 10 people can get an incentive of Rs 20,000 per worker. 50 percent of the cost of procurement of cutting edge technical equipment can be recovered not exceeding 10 lakhs while establishing a procurement logistics structure.
A State Logistics Center headed by the Director of Industries and a State Coordinating Committee headed by the Chief Secretary will soon be established to establish logistics infrastructure in the state.