Type Here to Get Search Results !

நயி சேத்னா - 2.0 (புதிய உணர்வு) என்ற தேசிய இயக்கம் / NAI CHETNA 2.0

  • நயி சேத்னா - 2.0 (புதிய உணர்வு) என்ற தேசிய இயக்கம் / NAI CHETNA 2.0: பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 'நயி சேத்னா - 2.0' (புதிய உணர்வு) என்ற தேசிய இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி தொடங்கியது. 
  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25 அன்று இந்த இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு நிகழ்வுகள் தொடங்கப்பட உள்ளன. 
  • இது 2023 டிசம்பர் 23 வரை 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடைப்பிடிக்கப்படும். 9.8 கோடிக்கும் அதிகமான கிராமப்புற பெண் உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஊரக வாழ்வாதார இயக்க தீனதயாள் அந்தியோதயா திட்ட சுய உதவிக் குழுக்களின் கட்டமைப்பு, இந்த வருடாந்திர இயக்கத்தை மக்கள் பங்கேற்பு என்ற உணர்வோடு வழிநடத்தும்.
  • தேசிய குடும்ப நல ஆய்வின் தரவு, வன்முறையால் பாதிக்கப்படுபவர்களில் 77 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் தங்கள் கசப்பான அனுபவத்தைப் பற்றி புகாரளிப்பதோ பேசுவதோ இல்லை என்று கூறுகிறது. 
  • நயி சேத்னா இயக்கம், பெண்களின் உரிமைகள், பயம் இல்லாத வாழ்க்கை மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறையை ஒழித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • இந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடையே பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும்.
  • இந்த இயக்கம் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பாக சமூக அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முன்முயற்சிகளையும் ஒன்றிணைத்து, உத்வேகம் அளிக்கும் ஒரு முயற்சியாகும்.

ENGLISH

  • NAI CHETNA 2.0: The Central Government launched a national campaign against gender-based violence called 'Nayi Chetna - 2.0' (New Consciousness). The movement's second year of events is set to kick off on November 25, the International Day for the Elimination of Violence Against Women. 
  • It will be observed till 23rd December 2023 in 34 states and union territories. The structure of National Rural Livelihood Movement Deenadayal Antiyothaya Project Self Help Groups with more than 9.8 crore rural women members will lead this annual movement with the spirit of people's participation.
  • Data from the National Family Health Survey suggests that more than 77 percent of women victims of violence do not report or talk about their ordeal. The Nayi Chetna movement aims for women's rights, fear-free life and eradication of gender-based discrimination and violence. 
  • The activities of this movement will increase awareness about gender-based violence among SHG members.
  • The movement is an initiative that unites and inspires all initiatives aimed at bringing about change at the societal level regarding gender-based violence.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel