Type Here to Get Search Results !

19th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


19th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

2023-ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ஷெய்னிஸ் பலாசியோஸ்
  • மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சல்வேடார் (El Salvador) நாட்டின் தலைநகரான சான் சல்வேடார் ( San Salvador) நகரில் நடைபெற்ற போட்டியில் 'Nicaragua'-வைச் சேர்ந்த மாடல் ஷெய்னிஸ் அலான்ட்ரா பலாசியோஸ் (Sheynnis Alondra Palacios) 72-வது பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.
  • அரையிறுதிச் சுற்றில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஸ்விம்சூட் சுற்று எல்லாம் முடிந்து இறுதியில் 10- பேர் போட்டியிட்டார்கள். இந்தியாவின் ஸ்வேதா ஷார்தா (Shweta Sharda) அரையிறுதிப் போட்டியோடு வெளியேறினார். முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை.
  • நிக்கராகுவாவைச் சேர்ந்தவர் முதல் முறையாக பிரபஞ்ச அழகி பட்டம் பெறுவது இதுவே முதல் முறை.. 
  • தாய்லாந்து நாட்டின் ஆண்டனியோ ப்ரொசில்ட் (Anntonia Porsild) இரண்டாம் இடம் பெற்றார்.
  • ஆஸ்திரேலியாவின் மராயோ வில்சன் (Moraya Wilson) மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக உலக சுகாதார அமைப்புடன் இந்தியா ஒப்பந்தம்
  • ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே, உலக சுகாதார அமைப்பின் சார்பாக உலகளாவிய சுகாதார பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை பாடப்பிரிவின் உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் புரூஸ் அய்ல்வார்ட்டும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • பாரம்பரிய மற்றும் துணைமருத்துவ முறைகளைத் தரப்படுத்துவதும், அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை தேசிய சுகாதார அமைப்பில் ஒருங்கிணைப்பதும், அவற்றை சர்வதேச அளவில் பரப்புவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம், பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ முறைகளை தேசிய சுகாதார அமைப்பின் முதன்மை நீரோட்டத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற, பாரம்பரிய மருத்துவம் உலகளாவிய உத்தி 2025-34 என்ற ஆவணம் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் உலக சுகாதார நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், இந்த ஒப்பந்தத்தின் பிற முக்கிய நோக்கங்கள் துணை மருத்துவ முறை 'சித்தா' துறையில் பயிற்சி மற்றும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், பாரம்பரிய மற்றும் துணை மருந்துகளைப் பட்டியலிடுவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல், பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய முயற்சிகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் ஏற்கனவே இரண்டு 'திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில்' கையெழுத்திட்டுள்ளது. யோகா, ஆயுர்வேதம், யுனானி, பஞ்சகர்மா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை உலக அளவில் கொண்டு செல்ல முதல் ஒப்பந்தமும், ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ முறைகளை வலுப்படுத்த 2017ஆம் ஆண்டில் இரண்டாவது ஒப்பந்தமும் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
4 டிரில்லியன் டாலர்களைத் தாண்டிய இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
  • முதல் முறையாக 4 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) அடைந்து, குறிப்பிடத்தக்க பொருளாதார அடையாளத்தை இந்தியா தாண்டியுள்ளது.
  • இந்த மைல்கல் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார வலிமை, ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய செல்வாக்கிற்கு ஒரு சான்றாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இந்த சாதனையானது பல ஆண்டுகளாக நிலையான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் விளைவாகும்.
  • இந்தியாவின் வலுவான வளர்ச்சியானது, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் மற்றும் வறுமையில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. 
  • 2030 ஆம் ஆண்டுக்குள் 279 மில்லியன் மக்கள் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வருமான அளவுகளில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகிறது.
உலகக் கோப்பை தொடரில் 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்
  • உலககோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 
  • இதனை அடுத்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 240 ரன்கள் சேர்த்தது.
  • இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது. இறுதியாக 43 ஓவர்களில் 42 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 
  • ஆட்ட நாயகன் விருது - டிராவிஸ் ஹெட்
  • தொடர் நாயகன் விருது - விராட் கோலி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel