Type Here to Get Search Results !

18th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

42வது இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா - அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்
  • செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னோடி திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்தும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துபாய், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணைர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது குறித்தும், அரசின் சாதனைகள் குறித்தும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதில் முக்கிய அம்சம் சென்னையில் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான விவரங்களை பார்வையாளர்கள் அறிந்து பயன்பெறும் வகையில் 'க்யூ ஆர் கோட்' முறை பொருத்தப்பட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. 
  • இதுதவிர தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த முக்கிய திட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் 42வது இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் திறந்தவெளி கலையரங்கில் 'தமிழ்நாடு நாள் விழா'வை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
  • இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பரதநாட்டியம் மற்றும் கைச்சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கோலாட்டம் ஆகிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  • தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோர் கண்டுகளித்தனர். 
  • டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் உட்பட, பல்வேறு மாநிலங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
தமிழ்நாடு பேரவையில் 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றம்
  • தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் பேரவைத் தலைவர் அப்பாவு உரையுடன் இன்று (நவ. 18) காலை தொடங்கியது. 
  • இதில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்வைத்தார். அது குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினர்.
  • முடிவில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 
  • இதன்மூலம் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இவை ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்படவுள்ளன. 
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டத்தின் 2.0-ல் தகவல் தொழில்நுட்ப கணினிக் கருவிகள் பிரிவில் 27 உற்பத்தியாளர்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது
  • உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் (பி.எல்.ஐ.) திட்டத்தில் செல்பேசிகளுக்கான வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தகவல் தொழில்நுட்ப கணினிக் கருவிகளுக்கான பி.எல்.ஐ திட்டம் - 2.0 க்கு, 2023, மே 17 அன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், அனைத்தும் அடங்கிய சுய கணினிகள் (பிசி) உள்ளிட்ட சாதனங்களை உள்ளடக்கியதாகும்.
  • இந்த இரண்டாம் கட்டத் திட்டத்தில் 27 கணினிக் கருவிகள் உற்பத்தியாளர்களின் விண்ணப்பங்களுக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • இதன் கீழ் ஏசர், ஆசஸ், டெல், ஹெச்பி, லெனோவா போன்ற பிரபலமான நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப கணினிக் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.
  • இந்த ஒப்புதலின் காரணமாக மொத்தம் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ரக்கப்படுகிறது. மேலும் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கணினிக் கருவிகள் உற்பத்தி செய்யப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel