14th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கூர்நோக்கு இல்லங்கள் மேம்பாடு - முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
- இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்திறன்களை மேம்படுத்தும்பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டகுழு ஒன்று உருவாக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
- அந்த அறிவிப்பினை செயல்படுத்தும்விதமாக, கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதியன்று இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசு ஆணையிட்டது.
- அதன்படி, சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவானது கடந்த மே மாதம் 2ஆம் தேதி முதல் பொறுப்பேற்றதுடன் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த ஏதுவாக பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டது.
- அதோடு மட்டுமல்லாது மேற்படி ஒரு நபர் குழுவானது மாநிலத்தில் செயல்பட்டுவரும் அனைத்து கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.
- இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவானது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் நீதியரசரின் ஆய்வின் அடிப்படையில் முழுமையான அறிக்கை தயாரித்து, அதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று வழங்கியது.
- மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2012=100 அடிப்படையில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் மற்றும் நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலை குறியீட்டை வெளியிட்டுள்ளது.
- அகில இந்திய மற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான துணைக் குழுக்கள் மற்றும் குழுக்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டெண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
- தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1181 கிராமங்களில் இருந்து வாராந்திர பட்டியலில் என்.எஸ்.ஓ, எம்.ஓ.எஸ்.பி.ஐ.யின் கள செயல்பாடுகள் பிரிவின் களப்பணியாளர்களின் தனிப்பட்ட வருகைகள் மூலம் விலை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
- நடப்பு அக்டோபர் மாதத்தில், என்.எஸ்.ஓ 99.8% கிராமங்கள் மற்றும் 98.6% நகர்ப்புற சந்தைகளிலிருந்து விலைகள் பெறப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்ட சந்தை வாரியான விலைகள் கிராமப்புறங்களுக்கு 89.0% மற்றும் நகர்ப்புறங்களுக்கு 92.0% ஆகும்.
- அகில இந்திய மொத்த விலை குறியீட்டெண், எண்ணை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திர பணவீக்க விகிதம் 2023 அக்டோபர் மாதத்தில் 2022 அக்டோபரை விட (-) 0.52% (தற்காலிக) குறைவாகும். இது 2023 செப்டம்பரில் (-) 0.26% குறைவாக பதிவாகியுள்ளது.
- 2023 அக்டோபரில் பணவீக்கத்தின் எதிர்மறை விகிதம் முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், மின்சாரம், ஜவுளி, அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், காகிதம் மற்றும் காகித பொருட்கள் போன்றவற்றின் விலைகள் குறைந்ததே முக்கிய காரணமாகும்.
- இந்தியக் கடற்படையின் 'ஸ்வார்ட் ஆர்ம்' என்றழைக்கப்படும் மேற்குக் கடற்படை, நவம்பர் 10, 2023 அன்று குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டது.
- ரியர் அட்மிரல் சி.ஆர்.பிரவீன் நாயர், என்.எம்.மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற கடற்படை அணிவகுப்பில், ரியர் அட்மிரல் வினீத் மெக்கார்டியிடமிருந்து மேற்குக் கடற்படையின் தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
- ரியர் அட்மிரல் நாயர், 1991, ஜூலை 01 அன்று இந்தியக் கடற்படையில் நியமிக்கப்பட்டார்.
- 42 வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் சுகாதார அரங்கை நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் திறந்து வைத்தார். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இந்த ஆண்டு அரங்கின் கருப்பொருள் "வசுதைவ குடும்பகம்" என்பதாகும்.
- கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரா், வீராங்கனைகள் சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கௌரவமிக்க ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்படுவது வழக்கம்.
- முன்னாள் இந்திய மகளிா் அணியின் கேப்டன் டயானா எடுல்ஜி, அதிரடி தொடக்க பேட்டா் வீரேந்திர சேவாக், இலங்கை ஜாம்பவான் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோா் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
- இந்நிலையில், இந்திய முன்னாள் கேப்டனும், பௌலா், நிா்வாகி என்ற சிறப்புகளைப் பெற்றுள்ள டயானா எடுல்ஜி (67) ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ள முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.