Type Here to Get Search Results !

ஊராட்சி மணி திட்டம் / URATCHI MANI SCHEME

  • ஊராட்சி மணி திட்டம் / URATCHI MANI SCHEME: கடந்த 2022-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் புகார்களைத் தீர்க்கும் வகையில் உதவி மையம் அமைப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஊராட்சி இயக்ககத்தில் 'ஊராட்சி மணி' அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த அழைப்பு மையத்தை (செப்.26) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் புகார்களைத் தெரிவிக்கும் வகையில் மைய அழைப்பு எண்' 155340' வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஊராட்சி மணி என்ற பெயர், மனுநீதிச் சோழனின் கதையை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறைகளை உடனடியாகத் தீர்ப்பதை இது உறுதி செய்கிறது. மக்களுக்கு பாரபட்சமற்ற, சமமான சேவையை வழங்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் கட்டணமில்லா சேவை தொடங்கப்படுகிறது. அழைப்பு மைய நிர்வாகி மூலமாகவோ, இணையதளம் வாயிலாகவோ குறைகளை உடனடியாக தீர்க்கும்வகையில், உரிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
  • இதுதவிர, சமூக வலைதளங்கள் மூலமும் குறைகள் பெறப்பட உள்ளன. புகார்களின் தீவிரத்தன்மை அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டு, உரிய தீர்வு காணப்படும். அதேபோல, சமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் புகார்களும் குறைதீர் மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • புகார்களை நேரடி அழைப்பு மையம், வலைதளம், செயலி வாயிலாகவும் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ENGLISH

  • URATCHI MANI SCHEME: Last year 2022, a government order was issued regarding the establishment of a help center to resolve the complaints filed in the Rural Development and Panchayat Directorate. Accordingly, a 'Municipal Clock' call center has been set up in the Panchayat Directorate.
  • Chief Minister M. K. Stalin will inaugurate this call center (September 26). A central call number '155340' has been provided to the public living in all panchayats in Tamil Nadu to report their complaints. Collector's interview assistant has been appointed as contact officer of panchayat bell call center in the districts.
  • The name Panchayat Mani is based on the story of Manuneetich Chola. This ensures prompt resolution of grievances. The center is set up to provide impartial and equitable service to the people.
  • For this, a toll-free service is being launched at the Directorate of Rural Development. Appropriate actions will be taken to resolve the grievances immediately through the call center administrator or through the website.
  • Apart from this, grievances are also received through social networking sites. Complaints are categorized based on their severity and redressed accordingly. Similarly, complaints received through social media will also be aggregated at the Grievance Redressal Center and appropriate action will be taken to redress them.
  • Officials said that arrangements have been made to receive complaints through a direct call center, website and app.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel