TNPSC டிகிரி முடித்தவர்களுக்கு Executive Officer வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
TNPSC EXECUTIVE OFFICER RECRUITMENT 2023
TNPSC நிறுவனத்தில் Executive Officer, Grade - I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: TNPSC
- பணியின் பெயர்: Executive Officer, Grade - I
- மொத்த பணியிடங்கள்: 09
தகுதி
TNPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Degree in Arts/ Science /Commerce மற்றும் degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்
TNPSC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,700/- முதல் ரூ.1,38,500/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
TNPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01.07.2023 தேதியின் படி, குறைந்தபட்ச வயது வரம்பு 30 ஆகும். SCs, SC(A)s, STs, MBC விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
TNPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Oral Test in the shape of an Interview. மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்க கட்டணம்
ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை
TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (11.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.