8th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியா, சவுதி அரேபியா இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
- இந்தியாவும் சவுதி அரேபியாவும் இன்று பிற்பகல் ரியாத்தில் மின்சார தொடர்புகள், பசுமை, சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் விநியோக சங்கிலிகள் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- ரியாத்தில் இன்று மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் மற்றும் சவூதி அரேபிய அரசின் எரிசக்தி துறை அமைச்சர் திரு. அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல்-சவுத் ஆகியோர் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்சார தொடர்புகள் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பசுமை, சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் இணை உற்பத்தி, மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நெகிழ்வான விநியோக சங்கிலிகளை நிறுவுதல் ஆகியவற்றையும் நோக்கமாக கொண்டிருக்கிறது.
- முன்னதாக, சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் காலநிலை வாரம் 2023 இல் இந்திய அரசின் மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தலைமையிலான இந்திய தூதுக்குழு பங்கேற்றது.
- சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு கல்வித் துறைகளில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (ஆர்.ஆர்.யு), அக்டோபர் 4, 2023 அன்று எடுத்துள்ளது. உகாண்டாவின் நாகுருவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உகாண்டா காவல் படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆர்.ஆர்.யு கையெழுத்திட்டது.
- ஆர்.ஆர்.யு.வின் அங்கீகாரம் மற்றும் சேர்க்கை இயக்குநர் கமாண்டர் மனோஜ் பட், பல்கலைக்கழகத்தின் ஐ.சி.ஓ.டி தலைவர் திரு ரவீஷ் ஷா மற்றும் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் ஏ.ஐ.ஜி.பி கோலுபா காட்ஃப்ரே ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- ஆர்.ஆர்.யு மற்றும் உகாண்டா காவல் படைக்கு இடையிலான ஒத்துழைப்பு, சட்ட அமலாக்க பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பரஸ்பர புரிதல் மற்றும் அறிவு பரிமாற்றத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- படைகளில் இணைவதன் மூலம், இரு நிறுவனங்களும் தங்கள் கல்வித் திட்டங்களை மேம்படுத்தவும், சட்ட அமலாக்க பணியாளர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு பங்களிக்கவும் முயல்கின்றன.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஆர்.ஆர்.யு , உகாண்டா காவல் படை ஆகியவை ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், பாடத்திட்ட மேம்பாட்டு முன்முயற்சிகள் மற்றும் சட்ட அமலாக்க கல்வியில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது போன்ற பல்வேறு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்.
- இரு நிறுவனங்களும் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களிலிருந்து பயனடைய இந்த முயற்சிகள் உதவுவதுடன், இறுதியில் அந்தந்த நாடுகளில் மேம்பட்ட சட்ட அமலாக்க நடைமுறைகளுக்கும் வழிவகுக்கும்.