Type Here to Get Search Results !

6th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


6th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
  • குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அக்டோபர் 9, 2023 அன்று புதுதில்லியில் பூசாவில் உள்ள என்.ஏ.எஸ்.சி வளாகத்தில், ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை, நியாயமான மற்றும் நெகிழ்வான விவசாய உணவு முறைகளை நோக்கி என்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
  • சி.ஜி.ஐ.ஏ.ஆர் பாலின தாக்க மேடை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) ஆகியவை இந்த நான்கு நாள் மாநாட்டை நடத்துகின்றன.
ஆசிய - பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
  • 2018 – 2021, 2021 - 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிய - பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியா ஏற்கனவே இரண்டு முறை பணியாற்றிய நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • TO KNOW MORE ABOUT - DUOLINGO PROMO CODE
  • யுனெஸ்கோவின் ஆதரவின் கீழ் 1977-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆசிய - பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனம் தனித்துவமான பிராந்திய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும். 
  • இந்நிறுவனத்தின் 21-வது பொது மாநாடு மற்றும் தொடர்புடைய கூட்டங்கள் 2023 அதன் தலைவரும் பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு கௌரவ் திவிவேதி தலைமையில் மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் 2023, அக்டோபர் 2 முதல் 4 வரை வெற்றிகரமாக நடைபெற்றது.
ஆசிய விளையாட்டுகள் - 13வது நாள்
  • மகளிர் ரிகர்வ் குழு போட்டியில் வியட்நாமை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா
  • ஆடவருக்கான ரிகர்வ் அணி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் இந்தியா தோல்வியடைந்து வெள்ளி வென்றது
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்த ஹெச்எஸ் பிரணாய் வெண்கலம் வென்றார்
  • பெண்களுக்கான 76 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் தாய்லாந்தின் அரிஞ்சர்கல் கன்பத்தை வீழ்த்தி கிரண் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சோனம் சீனாவின் ஜியா லாங்கை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சீனாவின் மிங்கு லியுவை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி அமான் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • பெண்களுக்கான ரெகு அரையிறுதியில் தாய்லாந்திடம் தோல்வியடைந்த இந்தியா வெண்கலத்தை வென்றது
  • இறுதிப் போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிராக 12-17 என்ற கணக்கில் இந்திய ஆண்கள் அணி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • ஆடவர் ஹாக்கியில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel