3rd OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலகின் தலைசிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு
- உலகின் மிகப்பெரிய விஸ்கி ருசிக்கும் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்தவகையில், நடப்பாண்டு நடைபெற்ற போட்டியில், உலகெங்கிலும் உள்ள 100 வகையான விஸ்கிகள் ருசிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், இந்திய தயாரிப்பான இண்ட்ரி விஸ்கியின் தீபாவளி கலெக்ஷன் பதிப்பு 2023ஆனது, 'டபுள் கோல்ட் பெஸ்ட் இன் ஷோ' விருதைப் பெற்றது.
- விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட் விருதில் கலந்து கொள்ளும் விஸ்கிகள் பல சுற்றுகள் போட்டியிடும். அவற்றின் சுவை ஒவ்வொரு கட்டத்திலும், பல்வேறு வகைகளில் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- அல்கோ-பெவ் துறையை சேர்ந்த மூத்த சுவைதயாரிப்பாளர்கள் கொண்ட நிபுணர்கள் குழு, ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்த விஸ்கியை அறிவித்து இறுதியாக, உலகின் தலைசிறந்த விஸ்கி தேர்வு செய்யப்படுகிறது.
- அமெரிக்க சிங்கிள் மால்ட், ஸ்காட்ச் விஸ்கி, போர்பன்ஸ், கனடியன் விஸ்கி, ஆஸ்திரேலிய சிங்கிள் மால்ட் மற்றும் பிரிட்டிஷ் சிங்கிள் மால்ட் போன்ற நூற்றுக்கணக்கான சர்வதேச பிராண்டுகளை இந்திய பீட் கிளாஸ் விஸ்கியான இண்ட்ரி விஸ்கி தோற்கடித்துள்ளது.
- மால்ட் பார்லியை உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் கரி நெருப்பால் வெளியிடப்படும் கலவைகளால் ஒரு ஸ்மோக்கி ஃப்ளேவர் கொடுக்கப்படும் விஸ்கியே பீட் கிளாஸ் (Peated whisky) விஸ்கி எனப்படுகிறது.
- டோக்கியோ விஸ்கி மற்றும் ஸ்பிரிட்ஸ் போட்டி 2023, லாஸ் வேகாஸில் நடந்த சர்வதேச விஸ்கி போட்டியான ஐம்பது சிறந்த உலக விஸ்கிகள் 2022 விருது உள்ளிட்டவைகளை இதற்கு முன்பு இண்ட்ரியின் சிங்கிள் மால்ட் டிரினி வென்றுள்ளது. மேலும், உலகின் டாப் 20 விஸ்கிகள் பட்டியலிலும் இண்ட்ரியின் சிங்கிள் மால்ட் டிரினி இடம்பெற்றுள்ளது.
- தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் மின்சாரம், ரயில் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் ரூ.8000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்தப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- தேசிய அனல் மின் கழகத்தின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் 800 மெகாவாட் அலகு, மனோகராபாத் மற்றும் சித்திபேட்டை இணைக்கும் புதிய ரயில் பாதை உள்ளிட்ட ரயில் திட்டங்கள் இதில் அடங்கும்.
- தர்மாபாத் - மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் - கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டம். பிரதமரின்- ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 20 அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
- சித்திபேட் - செகந்திராபாத் - சித்திபேட் ரயில் சேவையையும் பிரதமர் திரு மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார், ஜக்தல்பூரில் சுமார் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- பஸ்தார் மாவட்டத்தில் உள்ள நாகர்னாரில் ரூ.23,800 கோடிக்கு மேல் மதிப்புடைய என்.எம்.டி.சி எஃகு நிறுவனத்தின் எஃகு ஆலையை அர்ப்பணிப்பதும், பல ரயில்வே மற்றும் சாலை திட்டங்களும் இதில் அடங்கும். தரோகி - ராய்ப்பூர் மின்சார ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மேகாலயா மாநிலம் உம்ரோயில் இந்தியா- பங்களாதேஷ் இடையே 11-ம் ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியான சம்ப்ரிதி 2023 அக்டோபர் 03-ம் தேதி தொடங்கியது.
- சுழற்சி அடிப்படையில் இரண்டு நாடுகளும் ஏற்பாடு செய்யும் இந்தப் பயிற்சி, அடிப்படையில் வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை குறிக்கிறது.
- 2009 ஆம் ஆண்டில் அசாமின் ஜோர்ஹாட்டில் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி 2022 –ம் ஆண்டு வரை பத்து வெற்றிகரமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
- 14 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள சம்ப்ரிதி- XI, இரு தரப்பிலிருந்தும் சுமார் 350 வீரர்களை ஈடுபடுத்தும். இந்தப் பயிற்சி இரு ராணுவங்களுக்கும் இடையிலான பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துதல், பயிற்சி உத்திகளை பகிர்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.
- 52 பங்களாதேஷ் தரைப்படை பிரிகேட் பிரிவின் கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் முகமது மஃபிசுல் இஸ்லாம் ரஷீத் தலைமையில் 170 வீரர்கள் பங்களாதேஷ் குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
- இந்தியப் படைப் பிரிவில் முக்கியமாக ராஜ்புத் ரெஜிமெண்ட் பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் உள்ளனர். மலைப் படைப்பிரிவு கமாண்டர் பிரிகேடியர் எஸ்.கே.ஆனந்த் இந்தியப் படையை வழிநடத்துகிறார்.
- இந்தப் பயிற்சியில் பீரங்கிகள், பொறியாளர்கள் மற்றும் இரு தரப்பிலிருந்தும் சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.
- பெண்களுக்கான 5000 மீ ஓட்டத்தில் பாருல் சவுத்ரி தங்கம் வென்றார்
- பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் அன்னு ராணி தங்கம் வென்றார்
- ஆண்களுக்கான டெகாத்லானில் தேஜஸ்வின் சங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்
- ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் பிரவீன் சித்திரவேல் வெண்கலம் வென்றார்
- ஆண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் முகமது அப்சல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்றார்
- பெண்களுக்கான 54 கிலோ குத்துச்சண்டை போட்டியில் ப்ரீத்தி பவார்
- ஆண்களுக்கான கேனோ டபுள் 1000 மீ., போட்டியில் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங்
- ஆடவருக்கான +92 கிலோ குத்துச்சண்டை போட்டியில் நரேந்தர் வெண்கலம் வென்றார்
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் - உலக வங்கி கணிப்பு
- நடப்பு நிதியாண்டான 2023-24ல் தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது.
- இதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.3 சதவீதமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் 7.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்த இந்தியாவின் ஜிடிபி, 2024ம் ஆண்டில் 6.3 சதவீதமாக இருக்குமென கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட உலக வங்கி அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
- உலகளாவிய வளர்ச்சி விகிதம் குறைதல் மற்றும் உள்நாட்டில் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் வளர்ச்சி குறைந்தாலும், உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
- அதுதவிர, உணவுப் பொருட்களின் விலை படிப்படியாக குறையும் எனவும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால், உணவுப் பொருட்களின் விநியோகம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் உலக வங்கி அறிக்கையில், விவசாயத் துறை 3.5 சதவீதமும், தொழில்துறை 5.7 சதவீதமும், சேவைகள் துறை 7.4 சதவீதமும் வளர்ச்சியை எட்டும் என்றும், முதலீட்டு வளர்ச்சி 8.9 சதவீதமாக வலுவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.