Type Here to Get Search Results !

31st OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


31st OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

8-வது முறையாக Ballon d'Or விருதை வென்றார் மெஸ்ஸி
  • சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் Ballon d'Or விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறி இருந்தது. 
  • வழக்கம் போலவே 30 வீரர்கள் இந்த விருதுக்கான பரிந்துரையில் இடம் பெற்றிருந்தனர். ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • பிரெஞ்சு இதழான 'பிரான்ஸ் ஃபுட்பால்' கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகிறார். 
  • நடப்பு ஆண்டில் கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். இதில் முதலிடம் பிடித்த மெஸ்ஸி, நடப்பு ஆண்டுக்கான Ballon d'Or விருதை வென்றார். இதன் மூலம் 8-வது முறையாக அவர் இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
  • இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ல் Ballon d'Or விருதை வென்றுள்ளார். தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். மகளிர் பிரிவில் Ballon d'Or விருதை அடனா பொன்மதி வென்றார். 
  • ஸ்பெயின் நாட்டுக்காக அவர் விளையாடி வருகிறார். ஆடவர் பிரிவில் சிறந்த கிளப் அணிக்கான விருதை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றது. ஹாலண்ட், Gerd Muller டிராபியை வென்றார். மார்ட்டினஸ், Yachine டிராபியை வென்றார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் - அனீஷுக்கு வெண்கலம்
  • தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனீஷ் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றாா்.
  • 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவில் அவா் 28 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். முன்னதாக, தகுதிச்சுற்றில் அவா் 588 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தபோதே, அவருக்கான ஒலிம்பிக் இடம் உறுதியானது.
  • இத்துடன் துப்பாக்கி சுடுதலில் மட்டும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 12 இந்தியா்கள் தகுதிபெற்றுள்ளனா். அனீஷுடன் இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான பவேஷ் ஷெகாவத் 584 புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பிடித்தாா். விஜய்வீா் சித்து 581 புள்ளிகளுடன் 10-ஆம் இடமும், ஆதா்ஷ் சிங் 570 புள்ளிகளுடன் 25-ஆவது இடமும் பிடித்தனா்.
  • டிராப் ஆடவா் அணிகள் பிரிவில் ஜராவா்சிங் சந்து, கினான் செனாய், பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோா் கூட்டணி 341 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பக்கம் வென்றது. அதிலேயே தனிநபா் பிரிவில் ஜராவா்சிங் 6-ஆம் இடம் பிடித்தாா்.
  • அதிலேயே மகளிா் பிரிவில் ராஜேஷ்வரி குமாரி, ஷாகன் சௌதரி, பிரீத்தி ரஜக் ஆகியோா் முறையே 7, 8, 10-ஆவது இடங்களைப் பிடித்தனா். தற்போதைய நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா 8 தங்கம் உள்பட 30 பதக்கங்கள் வென்றுள்ளது.
லக்னோவில் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' நிகழ்ச்சி 2023
  • இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்.ஏ.எல்) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 'ஒற்றுமைக்கான ஓட்டம்' நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
  • 1.5 கி.மீ ஓட்டத்தை ஹஸ்ரத்கஞ்சில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே இருந்து பாதுகாப்பு அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம் கே.டி.சிங் பாபு விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.
  • பள்ளி மாணவர்கள், என்.சி.சி அணியினர், தடகள வீரர்கள், ஓட்டப்பந்தய ஆர்வலர்கள், எச்.ஏ.எல் வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் ஓட்டத்தில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel