Type Here to Get Search Results !

27th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


27th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்திற்கு ஜப்பான் நாட்டின் சுற்றுலா விருது
  • உள்ளூர் மக்களின் பங்களிப்பை பயன்படுத்தியும், இப்பகுதியின் ஏராளமான இயற்கை வளங்களைப் பயன்படுத்தியும் சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
  • மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம், சுற்றுப்பயணங்களை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் சமூகத்திற்கு அதன் பொருளாதார பங்களிப்பிற்காக மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் அதன் முயற்சிகளுக்காகவும் அங்கீகரிக்கப்பட்டது.
  • இத்தகைய உன்னத முயற்சிகளுக்காக ஜப்பான் நாட்டின் 7வது ஜப்பான் சுற்றுலா விருது வழங்கும் விழாவில் செயற்குழுவின் விருதிற்கு இத்திட்டம் தேர்வு செய்யப்பட்டது. 
  • ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடந்த 7வது ஜப்பான் சுற்றுலா விருது வழங்கும் விழாவில், ஜப்பான் சுற்றுலா கண்காட்சி செயற்குழுவின் தலைவர் ஹிரோயுகி தகாஹாஷி தமிழ்நாட்டின் மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்திற்காக வழங்கிய செயற்குழுவின் விருதினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன் கலந்து கொண்டார்.
7-வது இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
  • புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7-வது இந்தியா மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.10.2023) தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாடு (ஐஎம்சி) என்பது ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பாகும். 
  • இந்த மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. ஐஎம்சி 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.
  • அரங்கம் 5-ல் கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர், அதைப் பார்வையிட்டார். தொழில்துறை தலைவர்களும் நிகழ்ச்சியில் பேசினர்.
  • இந்த மூன்று நாள் மாநாடு 5 ஜி, 6 ஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தும், குறைக்கடத்தி தொழில்துறை, பசுமை தொழில்நுட்பம், இணையதள பாதுகாப்பு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கும்.
  • இந்த ஆண்டு, இந்திய மொபைல் மாநாடு 'ஆஸ்பயர்' என்ற புத்தொழில் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது புதிய தொழில்முனைவோர் முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் புத்தொழில்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவப்பட்ட வணிகங்களுக்கு இடையிலான தொடர்புகளை வளர்க்கும்.
  • இம்மாநாட்டில் சுமார் 5000 தலைமைச் செயல் அதிகாரிகள் நிலையிலான பிரதிநிதிகள், 230 கண்காட்சியாளர்கள், 400 புத்தொழில் நிறுவனத்தினர், துறை சார்ந்தோர் உட்பட சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel