25th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜப்பான்-இந்தியா செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி கூட்டாண்மை குறித்த இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இடையே ஜப்பான்-இந்தியா செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி கூட்டாண்மை குறித்து ஜூலை 2023 இல் கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- தொழில்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்திற்கு செமிகண்டக்டரின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரும்புகிறது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
- ஜி 2 ஜி மற்றும் பி 2 பி இருதரப்பு ஒத்துழைப்பு இரண்டும் நெகிழ்வான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 ஆம் ஆண்டிற்கான ரபி பருவத்தில் (01.10.2023 முதல் 31.03.2024 வரை) பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசியம் (பி & கே) உரங்கள் மீது ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான உரத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- வரவிருக்கும் 2023-24 ரபி பருவத்தில், ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் வழங்க ரூ.22,303 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த உரங்கள் விவசாயிகளுக்கு மலிவு விலையில் சீராக கிடைப்பதை உறுதி செய்வதற்காக 2023-24 ஆம் ஆண்டிற்கான (01.10.2023 முதல் 31.03.2024 வரை பொருந்தும்) அங்கீகரிக்கப்பட்ட விகிதங்களின் அடிப்படையில் பி & கே உரங்களுக்கான மானியம் வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கு மானிய, மலிவு மற்றும் நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
- உரங்கள் மற்றும் இடுபொருட்களின் சர்வதேச விலைகளில் சமீபத்திய போக்குகளைக் கருத்தில் கொண்டு பி & கே உரங்களுக்கான மானியத்தை நியாயப்படுத்துதல்.
- உர உற்பத்தியாளர்கள் / இறக்குமதியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் 25 தர பி & கே உரங்களை அரசாங்கம் வழங்குகிறது. 01.04.2010 முதல் P&K உரங்களுக்கான மானியம் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விவசாய நட்பு அணுகுமுறைக்கு ஏற்ப, விவசாயிகளுக்கு மலிவு விலையில் பி & கே உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது.
- யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் சல்பர் ஆகிய உரங்கள் மற்றும் இடுபொருட்களின் சர்வதேச விலைகளின் சமீபத்திய போக்குகளைக் கருத்தில் கொண்டு, 01.10.23 முதல் 31.03.24 வரை பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் (பி & கே) உரங்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான என்.பி.எஸ் விகிதங்களுக்கு ஒப்புதல் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
- விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரங்கள் கிடைக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட விலைகளின்படி உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
- உத்தராகண்ட் மாநிலத்தின் ஜம்ரானி அணை பன்னோக்குத் திட்டத்தை நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம் - விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைத் திட்டத்தின் (பி.எம்.கே.எஸ்.ஒய்-ஏ.ஐ.பி.பி) கீழ் சேர்க்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- ரூ.2,584.10 கோடி மதிப்பீட்டில் 2028 மார்ச் மாதத்திற்குள் இத்திட்டத்தை முடிக்க உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ.1,557.18 கோடி மத்திய அரசின் நிதியுதவிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த திட்டத்தின் மூலம் உத்தராகண்டின் நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் மாவட்டங்கள் மற்றும் உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மற்றும் பரேலி மாவட்டங்களில் 57,065 ஹெக்டேர் (உத்தராகண்டில் 9,458 ஹெக்டேர் மற்றும் உத்தரபிரதேசத்தில் 47,607 ஹெக்டேர்) கூடுதல் நீர்ப்பாசனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- மேலும் 14 மெகாவாட் நீர் மின் உற்பத்தியையும், 10.65 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயனடையும் ஹல்த்வானி மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு 42.70 மில்லியன் கன மீட்டர் (எம்.சி.எம்) குடிநீர் வழங்குவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.
- முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.
- அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
- இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
- ஏா் மாா்ஷல் சாதனா சக்சேனா நாயா் ராணுவத்தின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதன்மூலம் முதன்முறையாக அப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளாா்.
- ஏா் மாா்ஷலாக சாதனா சக்சேனா பதவி உயா்த்தப்பட்டு ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டதாக இந்திய விமானப் படை அறிவித்தது.
- இதன்மூலம் இப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையையும் விமானப் படையில் தொடா்ச்சியாகப் பணியாற்றி ஏா் மாா்ஷலாகப் பதவி உயா்த்தப்பட்ட இரண்டாவது பெண் அதிகாரி என்ற பெருமையையும் இவா் பெற்றுள்ளாா்.
- விமானப் படையில் பெண் ஏா் மாா்ஷலாக முதன்முறையாக பதவி உயா்த்தப்பட்டவா், ஓய்வுபெற்ற பெண் அதிகாரி பத்மா பந்தோபத்யாய ஆவாா்.
- சாதனா சக்சேனா புணேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று 1985-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சோ்ந்தாா். குடும்ப மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற இவா், தில்லி எய்ம்ஸில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளாா்.
- மேற்கு விமான மற்றும் பயிற்சிப் படையின் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய முதல் மற்றும் ஒரேயொரு பெண் அதிகாரி ஆவாா். இவா் விமானப் படையின் விசிஷ்ட சேவா பதக்கம் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா்.
- இவரின் கணவா் கே.பி.நாயா் ஏா் மாா்ஷலாக பதவி வகித்து ஓய்வுபெற்றவா். எனவே இவா்கள் விமானப் படையில் ஏா் மாா்ஷலாக பதவி வகித்த முதல் மற்றும் ஒரே தம்பதி என்பது குறிப்பிடத்தக்கது.