Type Here to Get Search Results !

20th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

20th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  • நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிவைத்தார். மெட்ரோ ரயிலின் மேம்படுத்தப்பட்ட வடிவமான ரேபிட் ரயில் (Rapid Rail) சேவை நமோ பாரத் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
  • அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்து டெல்லி வழியாக, மீரட் செல்லும் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • பின்னர், ரயில் நிலைய வளாகத்தில் இருந்த வழித்தட மாதிரியை பிரதமர் பார்வையிட்டார். பின்னர், நமோ பாரத் ரயிலில் பயணம் செய்த பிரதமர் ரயில் பணியாளர்களிடமும், அதில் பயணம் செய்த மாணவியரிடமும் உரையாடினார்.
  • இரண்டு பிராந்தியங்களுக்கு இடையேயான இந்த அதிவேக ரயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமான இடங்களில் மட்டுமே நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதற்காக, 180 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் அளவுக்கு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மற்றும் ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் இணைந்து ஹரியானாவில் மொத்தம் 15 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை இன்று (20-10-2023) தொடங்கி வைத்தனர்.
  • இந்நிகழ்ச்சியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல் இயக்குநர் திருமதி லலிதா சர்மா மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
  • நாடு முழுவதும் 1000 கேலோ இந்தியா மையங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel