"சிவில் நீதிபதி, மாவட்ட நீதிபதி, அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் ஆகிய பதவிகளுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேய கட்டணமில்லா கல்வியகத்துடன் இணைந்து இலவச பயிற்சி அளித்து வருகிறது.
இதுவரை இந்த பதவிகளில் 206 பேர் வெற்றி பெற்று பணிகளில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் சிவில் நீதிபதி பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடந்தது. அதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கான தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேய கட்டணமில்லா கல்வியகத்துடன் இணைந்து நடத்திய இலவச பயிற்சியில் படித்த 132 வழக்கறிஞர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெற உள்ள முதன்மைத் தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியை பெற விரும்புவோர் அக்டோபர் 13 முதல் 15 ஆம் தேதி வரை, எண்.28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், சென்னை-35 என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்துக்கு நேரிலோ,044-24358373, 24330952, 8428431107, 044-25342739 என்ற எண்களிலோ, mntfreeias.com என்ற இணையதளத்திலோ, tnbarcouncil@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.பயிற்சியை பொறுத்தவரையில், வருகிற 16 ஆம் தேதி முதல் பார் கவுன்சில் ஆடிட்டோரியத்தில் நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.