Type Here to Get Search Results !

2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSICS 2023

2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSICS 2023
  • 2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSICS 2023: ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 
  • அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
  • அந்த வகையில் நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று, நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதில், நடப்பு ஆண்டில் இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பியரி அகோஸ்டினி, பெரென்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய 3 பேருக்கு நடப்பு ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எலக்ட்ரான் மற்றும் ஆற்றலை விரைவாக செயல்முறைப்படுத்தும் அளவீடுகளை பயன்படுத்துவதற்கான கருவிகளை கண்டறிந்ததால் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 
  • அணுக்களில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்காக புதிய கருவியை இவர்கள் 3 பேரும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • அணுக்களில் மூலக்கூறுகளுக்கு இடையே இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதன் மூலம் புதுவிதமான ஒரு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். 
  • இது அறிவியல் உலகத்திற்கும், வருங்கால தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குவாண்டம் மெக்கானிக் என்பது போன்ற விஷயங்களுக்கு இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கருவியில் இவர்கள் 3 பேரின் பங்களிப்பும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • குறிப்பாக எலக்ட்ரான்களுக்கு இடையில் ஏற்படும் திசைவேக மாற்றம் மற்றும் ஆட்டோசெகண்ட் எனப்படுகின்ற ஹார்ட்பீட் மற்றும் ஏஜ் ஆப் யுனிவர்ஸ் போன்றவற்றை இதன் மூலம் கண்டறிய முடியும். 
  • அதாவது பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு அணுவில் உள்ள மாற்றங்களையும் இந்த கருவியின் மூலம் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இது விண்வெளி துறையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
  • 2022ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அலெய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் பெரிய தூரத்தில் பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் என்பதற்கான வழியைக் கண்டறிந்ததற்காக மூன்று பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

ENGLISH

  • NOBEL PRIZE FOR PHYSICS 2023: Nobel Prize is awarded every year. The Nobel Prize is awarded annually to those who achieve achievements in 6 fields: medicine, physics, chemistry, economics, peace and literature. The Nobel Peace Prize is announced in Norway and all other Nobel Prizes are announced in Stockholm, the capital of Sweden.
  • The Nobel Prize for Medicine was announced yesterday. Today, the Nobel Prize in Physics for the current year has been announced. In this, the Nobel Prize in Physics is distributed to 3 people who have achieved in the field of physics in the current year. 
  • The Nobel Prize in Physics for the current year has been announced for 3 people from America, Germany and Sweden namely Pierre Agostini, Berenk Krause and Anne Houllier.
  • It is said to be given by the discovery of tools for using measurements that process electrons and energy rapidly. It is said that the 3 of them have invented a new instrument to study the molecules and electrons in atoms.
  • A new kind of research can be done by studying the intermolecular electrons in atoms. It will be important to the world of science and future technology. It is also said to be useful for things like quantum mechanics. It has been reported that 3 of them have contributed to this tool.
  • In particular, the change in velocity between electrons and the heartbeat known as the autosecond and the age of the universe can be detected through it. This means that changes in every atom in the barium can be detected with this instrument. Hence it is said to be important in space industry as well.
  • The 2022 Nobel Prize in Physics has been awarded to Alain Aspect of France, John F. Glaser of the United States and Anton Seilinger of Austria. All three are credited for finding a way that invisible particles called photons, even when separated by large distances, can be connected to each other.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel