12th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை 25 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
- இந்நிலையில், வனத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வரையாடுகளை பாதுகாப்பதற்கான திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரையாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புத்தகங்களை வழங்கினார்.
- இந்தத் திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போரில் சுமார் 18,000 இந்தியர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த யுத்தத்தில் சிக்கிய 18,000 இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. மத்திய அரசு தொடங்கியுள்ள இந்த "ஆபரேஷன் அஜய்" திட்டத்தின் கீழ் இன்று சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் ஊரக வளர்ச்சி, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர், தோட்டக்கலை, கல்வி, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் சுமார் ரூ.4200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.