Type Here to Get Search Results !

11th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


11th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்திய விமானப்படை
  • இந்திய விமானப்படை (IAF) கிழக்கு கடற்பரப்பு தீவுக்கூட்டத்திற்கு அருகில் மேற்பரப்பிலிருந்து மேற்பரப்பை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
  • ஏவுகணை அதன் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
  • இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணை இந்தியாவில் பிரம்மோஸ் என்றும் ரஷ்யாவில் பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் என்றும் அழைக்கப்படுகிறது.
  • பிரம்மோஸ் ஏவுகணையின் மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பை தாக்கும் மாறுபாட்டை துல்லியமான இலக்கில் வெற்றிகரமாக சோதித்ததற்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் கூட்டுப் பங்கு நிறுவனமான இராணுவத் தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
  • இந்திய ஆயுதப் படைகளின் சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஆத்மநிர்பர் பாரத் நோக்கத்தின் உறுதிப்பாட்டை பிரம்மோஸ் ஏவுகணை மீண்டும் வலியுறுத்தியதாகவும் புகழாரம் சூட்டப்படுகிறது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 1998ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 
  • பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை வடிவமைத்தல், மேம்படுத்துதல், தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு இந்த நிறுவனமே பொறுப்பாகும்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஒப்பந்தம்
  • இந்தியா முழுவதும் ஒலிம்பிக் கல்வியை கற்றுத் தருவதற்காக சர்வசே ஒலிம்பிக் கமிட்டியுடன் ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இதற்கான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நிடா அம்பானியும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச்சும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
  • இளைஞர்களிடையே விளையாட்டு மூலம் ஒலிம்பிக் மதிப்புகளை மேம்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஒலிம்பிக் மதிப்புகள் உறுதிமொழி சுவரில் மாணவர்களுடன் இரு தலைவர்களும் கை ரேகைகளை பதித்தனர். இது விளையாட்டு மற்றும் அன்றாட வாழ்வு இரண்டிலும் நேர்மறையான முன்மாதிரியாக இருப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
  • இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுடன் தாமஸ் கால்பந்தாட்டம் விளையாடி மகிழ்வித்தார். நீடா அம்பானி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வு இரு தலைவர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
  • வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையில், விதி எண்.110-ன்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். 
  • அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.
லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் (ஆர்.இ.இ) ஆகிய மூன்று முக்கிய கனிமங்களை சுரங்கம் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் (ஆர்.இ.இ) ஆகிய 3 முக்கிய கனிமங்களைத் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதத்தை நிர்ணயிப்பதற்காக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் இரண்டாவது அட்டவணையில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது
  • சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023 அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, இது 2023 ஆகஸ்ட் 17 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 
  • லித்தியம், நியோபியம் உள்ளிட்ட 6 கனிமங்களை அணுக் கனிமங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, இந்தக் கனிமங்களுக்கான சலுகைகளைத் தனியாருக்கு ஏலம் மூலம் வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது. 
  • மேலும், லித்தியம், நியோபியம், மற்றும் ஆர்.இ.இ (யுரேனியம் மற்றும் தோரியம் இல்லாதவை) உள்ளிட்ட 24 முக்கிய கனிமங்களின் (சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி டி இல் பட்டியலிடப்பட்டுள்ளன) சுரங்க குத்தகை மற்றும் கலப்பு உரிமத்தை மத்திய அரசு ஏலம் விட இந்தத் திருத்தம் வழிவகுத்துள்ளது.
  • உரிமைத்தொகை விகிதத்தை வரையறுக்க மத்திய அமைச்சரவையின் இன்றைய ஒப்புதல், லித்தியம், நியோபியம் மற்றும் ஆர்.இ.இ.களுக்கான தொகுதிகளை ஏலம் விட நாட்டிலேயே முதல் முறையாக மத்திய அரசுக்கு உதவும். 
  • கனிமங்கள் மீதான உரிமைத்தொகை விகிதம் என்பது பிளாக்குகளை ஏலத்தில் எடுப்பவர்களுக்கு ஒரு முக்கியமான நிதி அம்சமாகும். மேலும், இந்தக் கனிமங்களின் சராசரி விற்பனை விலையை (ஏஎஸ்பி) கணக்கிடுவதற்கான வழிமுறையும் சுரங்க அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது, இது ஏல அளவுருக்களை தீர்மானிக்க உதவும்.
வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பப்புவா நியூகினியாவின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த ஜூலை 28 –ம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் உருமாற்ற முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். 3 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும்.
  • டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) துறையில், அரசுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையே இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பிரெஞ்சுக் குடியரசின் பொருளாதாரம், நிதி மற்றும் தொழில்துறை மற்றும் டிஜிட்டல் இறையாண்மை அமைச்சகம் இடையே கையெழுத்தான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தொடர்பான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான அணுகலை ஊக்குவிப்பதற்கான ஒவ்வொரு பங்கேற்பாளரின் இலக்கையும் பரஸ்பரம் ஆதரிக்கும்.
  • டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகள் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையும்.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படியான கீழ் ஒத்துழைப்பு, பங்கேற்பாளர்கள் இருவராலும் கையொப்பமிடப்பட்ட தேதியில் தொடங்கி ஐந்து (5) ஆண்டுகள் நீடிக்கும்.
வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே ஆகஸ்ட் 11 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் அனுபவங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) துறையில், அரசுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையே இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேரா யுவ பாரத் என்கின்ற எனது இளையபாரதம் என்ற தன்னாட்சி அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞர் மேம்பாடு மற்றும் இளைஞர்கள் தலைமை தாங்கும் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு பரந்த நடைமுறையாக செயல்படவும், இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், அரசின் அனைத்துத் தரப்பிலும் வளர்ந்த பாரதத்தை உருவாக்கவும், சமமான அணுகலை வழங்குவதற்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான மேரா யுவ பாரத் (எம்.ஒய் பாரத்) எனும் எனது இளையபாரதம் என்ற அமைப்பை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • மேரா யுவ பாரத்தின் முதன்மை நோக்கம், அதனை இளைஞர்களின் மேம்பாட்டிற்கான ஒரு முழு அரசுத் தளமாக மாற்றுவதாகும். 
  • புதிய ஏற்பாட்டின் கீழ், வளங்களை அணுகுதல் மற்றும் வாய்ப்புகளுக்கான இணைப்புடன், இளைஞர்கள் சமூக மாற்ற முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாறுவார்கள். 
  • இது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களின் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்த முயல்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel