9th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் இயக்கம்
- உலகில் உள்ள நாடுகளுக்கு உதவும் நோக்கில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் இயக்கத்தை இந்தியா சனிக்கிழமை தொடங்க முன்மொழிந்தது.
- அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் முன்னிலையில், பாரத் மண்டபம் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆலோசனையை வழங்கினார்.
- இந்தியாவின் வெற்றிகரமான சந்திரயான் நிலவுப் பயணத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் போலவே, G20 செயற்கைக்கோள் பணி மனிதகுலம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
- அதே உத்வேகத்துடன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான 'ஜி 20 செயற்கைக்கோள் மிஷன்' தொடங்குவதற்கு இந்தியா முன்மொழிகிறது," என்று அவர் கூறினார். இந்த முயற்சியில் சேருமாறு அனைத்து ஜி-20 நாடுகளையும் இந்தியா அழைக்கிறது" என்று ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
- ஜி20 கடந்த 1999-ல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சேர ஆப்பிரிக்க யூனியன் பல ஆண்டுகளாக முயன்று வந்தது. ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் இதன் உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியது.
- இந்த மாநாட்டில், மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை தொடர்ந்து, ஆப்பிரிக்க யூனியன் புதிய நிரந்தர உறுப்பினர் ஆனது.
- ஜி20 நிரந்தர உறுப்பினருக்கான இருக்கையில் அமர ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அசாலி அசவ்மானிக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுக்கும்போது, 'அனைவரையும் அழைத்துச் செல்வது என்ற உணர்வுக்கு ஏற்ப, ஆப்பிரிக்க யூனியனுக்கு ஜி20-ல் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என இந்தியா முன்மொழிந்தது. இந்த முன்மொழிவுக்கு அனைவரும் உடன்படுவதாக நான் நம்புகிறேன்' என்றார்.
- இதையடுத்து உலகத் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆப்பிரிக்க யூனியனை வரவேற்றனர். வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் பிரதமர் மோடியும் அசாலி அசவ்மானியை நிரந்தர உறுப்பினருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
- ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினர் ஆனது. ஜி20 தொடங்கியதில் இருந்து அது, விரிவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
- நம் நாட்டின் தலைமையில் பிரமாண்டமாக நடந்து வரும் ஜி - 20 மாநாடு, பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. இதில், முதன்மையான ஐந்து விவகாரங்கள் மாநாட்டின் பேசு பொருளாக உள்ளன.
- ஜி - 20 அமைப்பில் புதிய நிரந்தர உறுப்பினராக ஆப்ரிக்க ஒன்றியம் இணைந்துஉள்ளது. இதனால், வளரும் நாடுகளுக்கு உலகளாவிய முடிவெடுப்பதில் அதிக பங்களிப்பு வழங்கப்படுகிறது.
- இரண்டாவதாக, நம் நாட்டுடன், அமெரிக்கா, சவுதி அரேபியா, வளைகுடா மற்றும் அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை இணைக்கும் விரிவான ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து இணைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய இணைப்பு வழித்தட திட்டமான இது, சீனாவின் பெல்ட்ரோடு திட்டத்துக்கு மாற்று ஏற்பாடாகும்.
- பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்டம், அமைதி, ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் பலதரப்பு விதிகள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களை நிலைநாட்டும்படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது மூன்றாவது முக்கிய அம்சமாகும்.
- துாய்மையான எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிக்க உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை துவங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார். தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் உட்பட பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட உயிரி எரிபொருளின் வர்த்தகத்தை எளிதாக்குவதன் வாயிலாக, பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை அடைவதற்கான உலகளாவிய முயற்சிகளை இந்தக் கூட்டணி துரிதப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டது.
- சமீப காலமாக உலக நாடுகளின் மத்தியில் அதிகரித்துள்ள நம்பிக்கை பற்றாக்குறையை உறுப்பு நாடுகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்புடன் சமாளிக்க வேண்டும் என்பதாகும்.