8th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வாகனங்களில் பாதுகாப்பு வசதி கட்டாயமாக்கியது ஒடிசா அரசு
- சாலைகளில் செல்லும் வாகனங்களை கண்காணிக்கவும், பயணியரின் பாதுகாப்பை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இவற்றில், பஸ்கள், டாக்சிகள், சரக்கு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவைகள் அடங்கும். வரும் அக்டோபர் 1 மற்றும் அதற்குப் பின் பதிவுசெய்யப்படும் புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது, இச்சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
- அதே நேரத்தில், செப்டம்பர் 30 மற்றும் அதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட பழைய வாகனங்கள், வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இக்கருவிகளை பொருத்த வேண்டும்.
- புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களில், இச்சாதனங்கள் இல்லையென்றால், அவை பதிவு செய்யப்பட மாட்டாது. அதேசமயம், பழைய வாகனங்களில் இந்த பாதுகாப்பு வசதிகளை செய்யவில்லையென்றால் வாகன உரிமையாளர்களால் 'வாகன்' இணையதளத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட எந்த பணிகளையும் ஜனவரி 1ம் தேதிக்குப் பின் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.
- மேலும், இக்கருவிகளின் மேம்பாடு, மேலாண்மை மற்றும் செயல்பாட்டிற்காக, ஒடிசா அரசின் மாநில போக்குவரத்து ஆணையம், கடந்த ஆண்டு அக்டோபரில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக இருந்த அருண்ராய் தொழில்துறை செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.
- ஏற்கனவே, தொழில்துறை செயலாளராக இருந்த எஸ்.கிருஷ்ணன் ஒன்றிய அரசு பணிக்கு சென்றதை அடுத்து தற்காலிகமாக அருண் ராய் நியமனம் செய்யப்படுகிறார்.
- உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் சிங்கப்பூரில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இரு நாடுகளின் நீதித்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நீதித்துறை அகாடமியின் தலைவரான தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- மேலும், நீதித்துறை ஒத்துழைப்பு தொடர்பான மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் சிங்கப்பூரும் கையெழுத்திட்டன.