7th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
20-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 18-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
- இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், புருனே, மியான்மர், கம்போடியா, திமோர்-லெஸ்டே மற்றும் லாவோஸ் ஆகிய ஆசிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள சர்வதேச கூட்டமைப்பாக ஏசியன் (ASEAN) கூட்டமைப்பு உள்ளது.
- இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று விமானம் மூலம் இந்தோனீசிய தலைநகர் ஜகார்தாவிற்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு இந்தோனீசிய முறைப்படி பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் உடன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சென்றுள்ளார்.
- ஜகார்த்தாவில் நடைபெற்ற 20 வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18 வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
- தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் நேற்று மோதின.
- இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. முதல் ஆட்டத்தில் சீன தைபேவின் ஹுவாங் யுவான் 11-6, 11-6, 11-9, என்ற நேர் செட்டில் இந்தியாவின் ஷரத் கமலை வீழ்த்தினார்.
- அடுத்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள யன் ஜு லின் 11-5, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சத்தியனை தோற்கடித்தார்.
- ஹர்மீத் தேசாய் 6-11, 7-11, 11-7, 9-11 என்ற செட் கணக்கில் சென் ஜுயி கவோவிடம் வீழ்ந்தார். இந்த 3 ஆட்டங்களும் 82 நிமிடங்களில் முடிவடைந்தன. அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.