6th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (பி.இ.எஸ்.எஸ்) மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதி என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- மாண்புமிகு பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2030-31 ஆம் ஆண்டிற்குள் 4,000 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- மூலதன செலவில் 40% வரை வரவுசெலவுத் திட்ட உதவியாக சாத்தியக்கூறு இடைவெளி நிதி வடிவத்தில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பேட்டரி சேமிப்பு அமைப்புகளின் செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் திறனைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம் குடிமக்களுக்கு சுத்தமான, நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ரூ.9,400 கோடி தொடக்க ஒதுக்கீட்டில், ரூ.3,760 கோடி வரவுசெலவுத் திட்ட ஆதரவு உள்பட, பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதித்திட்டம், நிலையான எரிசக்தி தீர்வுகளுக்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
- இதன் மூலம் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு ரூ.5.50 - 6.60 வரை சமநிலைப்படுத்தப்பட்ட சேமிப்பு செலவை அடைவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
- இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் 2017-க்கு ரூ.1164.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம், 2017-ஐ 2018 ஏப்ரல் 23, 2018 தேதியிட்ட அறிவிக்கை எண் 2 (2) / 2018-எஸ்பிஎஸ் மூலம் மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.131.90 கோடியாகும்.
- ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 2021-22 நிதியாண்டில் செலவழிக்கப்பட்டது. மேலும், 2028-2029 ஆம் ஆண்டு வரை உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற கூடுதல் நிதித் தேவை ரூ.1,164.53 கோடியாகும்.
- இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை ஒதுக்க, தொழில் வளர்ச்சித் திட்டம், 2017ன் கீழ், அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்பட்டது.
- 18வது ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, "ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மிந்தொடர் கட்டமைப்பு (OSOWOG) என்பதற்கான நாடுகடந்த கிரிட் இணைப்பு" என்ற தலைப்பில் ஒரு நாள் மாநாடு இன்று புது தில்லியில் நடைபெற்றது.
- மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள 'மஹாரத்னா' நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (POWERGRID) மூலம் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.