5th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முன்னாள் மாகாண முதல்வர் சுப்பராயனுக்கு சிலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான செய்தித்துறை மானிய கோரிக்கையில், தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்குச் சட்டவடிவம் கொடுத்தவருமான, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் ப.சுப்பராயனின் சேவைகளை நினைவுகூரும் வகையில், அவருக்கு சென்னையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- அதன்படி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
- இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, மா,மதிவேந்தன், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பொதுப்பணித் துறை செயலர் பி.சந்திரமோகன், தமிழ்வளர்ச்சித் துறை செயலர் ஆர்.செல்வராஜ், செய்தித்துறை இயக்குநர் த.மோகன், ப.சுப்பராயனின் கொள்ளுப்பேரன் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான மற்றொரு முயற்சியாக, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா (பிஓபி) ஆகியவற்றுடன் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் (ஐ.ஆர்.இ.டி.ஏ) புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் செப்டம்பர் 5, 2023 அன்று கையெழுத்திட்டுள்ளது.
- யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைந்து, நிறுவப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் பரந்த அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு இணை கடன் வழங்க இந்த ஒப்பந்தங்கள் வகை செய்யும்.
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் பொது மேலாளர் (தொழில்நுட்ப சேவைகள்) திரு பரத் சிங் ராஜ்புத், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் பொது மேலாளர் திரு. தீரேந்திர ஜெயின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.