31st AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி
- தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-24 ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
- இதே காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக உள்ளது. பொருளாதாரத்தில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாறி உள்ளது.
- விவசாயம், நிதித்துறைகளில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளன. நிதியியல், ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் சேவை பிரிவுகளில் கடந்த ஆண்டு 8.5 சதவீதமாக இருந்த வளர்ச்சி தற்போது 12.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- ஆனால் உற்பத்தி துறையில் கடந்த ஆண்டு 6.1 சதவீதமாக இருந்தது. தற்போது 4.7 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
- நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
- இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவ பகுதியில் பல்வேறு ஆய்வுப்பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது.
- இந்நிலையில், விக்ரம் லேண்டரின் 'RAMBHA LP' அறிவியல் ஆய்வு கருவியின் ஆய்வு முடிவுகளை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
- அதில் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பது உறுதி செய்துள்ளதாகவும், ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான்கள் அடர்த்தி உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.