28th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆசிய விளையாட்டு போட்டி - 5ஆம் நாள்
- சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டுத் திருவிழா களைகட்டி வருகிறது. இதன், 5ம் நாளான வியாழக்கிழமை ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன.
- துப்பாக்கி சுடுதலில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர் அணியின் சார்பில் சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா மற்றும் ஷிவ நர்வால் ஆகியோர் களம் கண்டனர். இவர்கள், போட்டியின் போது இலக்கை நோக்கி துல்லியமாக சுட்டு புள்ளிகளை குவித்ததுடன், சக போட்டியாளர்களுக்கு கடும் சவால் அளித்தனர்.
- தொடர்ந்து நேர்த்தியாக செயல்பட்ட இந்திய ஆடவர் அணி மொத்தம் 1734 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. இதன் மூலம் ஹாங்சோ அரங்கில் மூவர்ணக் கொடி உயரே பறந்ததுடன் தேசிய கீதமும் ஒலித்தது.
- இதே பிரிவில், சீன அணி வெள்ளிப் பதக்கமும், வியட்னாம் அணி வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தின. ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் ஜொலித்ததன் வாயிலாக நடப்பு ஆசிய போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மட்டும் இந்தியாவிற்கு நான்காவது தங்கம் கிடைத்துள்ளது.
- வுசூ விளையாட்டின் மகளிர் 60 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா, சீனாவின் ஜியேவெய் உடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சற்று சறுக்கலை சந்தித்த ரோஷிபினா நூலிழையில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். இப்போட்டியில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தனது கழுத்தில் ஏந்தினார். மேலும், வுசூ விளையாட்டில் அருணாச்சல பிரதேச வீராங்கனைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதே பிரிவில் ரோஷிபினா பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
- ஆசிய போட்டியின் குதிரையேற்றத்தில் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. டிரெஸ்சேஜ் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அனுஷ் அகர்வால் 73 புள்ளிகள் எடுத்து மூன்றாம் இடம் பிடித்தார். இதன் மூலம் வெண்கல பதக்கத்தை வசப்படுத்தி கவனம் ஈர்த்தார்.
- இதனிடையே, டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழ்நாட்டு வீரர்களான சரத் கமல் மற்றும் சத்யன் ஆகியோர் தனிநபர் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
- ஐந்தாம் நாள் மட்டும் இந்திய அணி, தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி உட்பட 3 பதக்கங்களை வென்றன. மேலும், ஒட்டு மொத்தமாக இந்தியா 6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
- தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994 ஐ திருத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் (எம்.எஸ்.ஓ) பதிவுகளை புதுப்பிப்பதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்தியது.
- மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுடன் உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
- எம்.எஸ்.ஓ பதிவுக்கான திருத்தப்பட்ட விதிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
- எம்.எஸ்.ஓக்கள் பதிவுக்கும், பதிவை புதுப்பிக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக ஒளிபரப்பு சேவா போர்ட்டலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- எம்.எஸ்.ஓ பதிவுகள் பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும்.
- செயலாக்கக் கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.
- பதிவை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் பதிவு காலாவதியாவதற்கு ஏழு முதல் இரண்டு மாதங்களுக்குள் இருக்க வேண்டும்.
- இந்த புதுப்பித்தல் செயல்முறை வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது, ஏனெனில் இது கேபிள் ஆபரேட்டர்களுக்கு தங்கள் சேவைகளை தடையின்றி தொடர உறுதியை வழங்கும்.
- 7 மாதங்களுக்குள் பதிவு காலாவதியாகும் எம்.எஸ்.ஓக்கள் பிராட்காஸ்ட் சேவா போர்ட்டல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால், போர்ட்டலில் உள்ள ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம், அல்லது ஒரு மின்னஞ்சல் sodas-moiab[at]gov[dot]in க்கு அனுப்பப்படலாம்.
- முன்னதாக, கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் விதிகள், 1994 இன் கீழ் புதிய எம்.எஸ்.ஓ பதிவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. எம்.எஸ்.ஓ பதிவுகளுக்கான செல்லுபடியாகும் காலத்தை விதிகள் குறிப்பிடவில்லை, அல்லது ஆன்லைன் விண்ணப்பங்களை கட்டாயமாக தாக்கல் செய்வதையும் அங்கீகரிக்கவில்லை.
- கேபிள் ஆபரேட்டர்கள் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுடன் உள்கட்டமைப்பைப் பகிர்வது தொடர்பான ஒரு விதியைச் சேர்ப்பது மேம்பட்ட இணைய ஊடுருவல் மற்றும் வளங்களின் திறமையான பயன்பாடு ஆகிய இரட்டை நன்மைகளை வழங்கும். இது பிராட்பேண்ட் சேவைகளுக்கான கூடுதல் உள்கட்டமைப்பின் தேவையையும் குறைக்கும்.
- உலக அறிவுசார் சொத்து அமைப்பு வெளியிட்டுள்ள 2023 உலகளாவிய புத்தாக்க குறியீட்டு தரவரிசையில் 132 பொருளாதாரங்களுள் இந்தியா 40 வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
- உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் (ஜி.ஐ.ஐ) 2015-ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ஆம் ஆண்டில் 40 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
- பெருந்தொற்றால் ஏற்பட்ட மோசமான நெருக்கடிக்கு எதிரான நமது போரில், புதிய கண்டுபிடிப்புகள் முன்னிலையில் இருந்து வருவதோடு, நாட்டின் மீள்திறனை இயக்குவதில் முக்கியமானதாகவும் இருக்கும் என்பது தற்சார்பு இந்தியாவிற்கான பிரதமரின் அழைப்பில் வெளிப்படுகிறது.
- கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடைக்கோடியில் தமிழக எல்லையோரம் உள்ள காந்தளூர் ஊராட்சியில் காய்கறி, பழ சாகுபடி முக்கிய தொழில்.
- ஆப்பிள் உட்பட பல்வேறு பழங்கள் கால நிலைக்கு ஏற்ப விளையும் என்பதால், சுற்றுலா பயணியர் விரும்பி வாங்கிச் செல்வர்.அப்பகுதி சமீப காலமாக சுற்றுலாவில் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
- இந்நிலையில், சிறந்த சுற்றுலா கிராமங்களை தேர்வு செய்து, மத்திய அரசு விருது வழங்கி வருகிறது.நாட்டில் உள்ள 2.5 லட்சம் ஊராட்சிகளில், 767 ஊராட்சிகள் போட்டியிட்டன.
- அதில், தேர்வு செய்யப்பட்ட ஐந்து சுற்றுலா கிராமங்களுக்கு தங்கம், 10 கிராமங்களுக்கு வெள்ளி, 20 கிராமங்களுக்கு வெண்கலம் விருதுகள் வழங்கப்பட்டன.
- எட்டு மாதங்களாக நடந்த பல்வேறு சுற்று போட்டிகளின் முடிவில், சிறந்த சுற்றுலா கிராமமாக காந்தளூர் ஊராட்சி தேர்வாகி தங்க விருதை வென்றது.
- புதுடில்லியில் நடந்த விழாவில் மத்திய சுற்றுலா துறை செயலர் வித்யாவதிவிடம், காந்தளூர் ஊராட்சி தலைவர் மோகன்தாஸ் விருதை பெற்றுக்கொண்டார்.