Type Here to Get Search Results !

25th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


25th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்திய விமானப்படையில் சி-295 போக்குவரத்து விமானத்தை முறைப்படி இணைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • ஏர்வேஸ் டிபான்ஸ் அண்ட் ஸ்பைஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21,935 கோடி மதிப்பிலான 56 சி-295 ராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்டுள்ள முதல் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம் சமீபத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் உள்ள ஹிந்தன் விமான படைத்தளத்தில் சி-295 ராணுவ போக்குவரத்து விமானத்தை விமான படையில் இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 
  • நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சி-295 ராணுவ போக்குவரத்து விமானத்தை விமானப்படையில் முறைப்படி இணைத்தார். 
  • தொடர்ந்து ட்ரோன் சக்தி 2023 கண்காட்சியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். சி-295 ராணுவ போக்குவரத்து விமானம் இந்திய விமான படையின் முதல் போக்குவரத்து விமானம் ஆகும்.
சிறந்த சுற்றுலா கிராமமாக நீலகிரி மாவட்டத்தில் உல்லாடா தேர்வு
  • தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களை தேடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி சிறந்த சுற்றுலா கிராம போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கி வைத்தார்.
  • உள்ளூரின் கலை, கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களை கவுரவிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக தனி இணையதளமும் தொடங்கப்பட்டது. 
  • இதையடுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 795 விண்ணப்பங்கள் மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு வந்தது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 
  • இதற்கான விருதை பெறுவதற்காக உல்லாடா கிராம தலைவர் மாதன் தலைமையிலான குழுவினர் டெல்லிக்கு சென்று உள்ளனர். இவர்களுக்கான பயண செலவு, உணவு செலவு, தங்குமிடம் ஆகியவற்றை மாநில சுற்றுலாத்துறை ஏற்றுள்ளது. நாளை 27-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
கேரள அரசிற்கு மத்திய அரசின் ஆரோக்கிய மந்தன் விருது அறிவிப்பு
  • கேரளாவில் காருண்ய ஆரோக்கிய சுரக்க்ஷா என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 
  • அங்குள்ள 613 மருத்துவமனைகள் மூலம் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சேவையை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் மத்திய அரசின் 'ஆரோக்கிய மந்தன் 'தேசிய விருது இந்த ஆண்டு கேரளாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி - 3 ஆம் நாள்
  • மகளிர் கிரிக்கெட் டி20 இறுதிப் போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.
  • தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டும் அடித்த நிலையில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது.
  • சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.
  • ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப் போட்டியில், இரு இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இடையேயான வெண்கலப் பதக்கத்துக்கான நேருக்கு நேர் போரில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ருத்ராங்க் பாட்டீலை வீழ்த்தினார். இதன் மூலம் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெண்கலம் பதக்கம் வென்றார்.
  • ஆடவர் 4 இறுதிப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது. ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
  • ஆடவர் குவாட்ரூபிள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் சத்னம் சிங், பர்மிந்தர் சிங், ஜாகர் கான், சுக்மீத் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்தப் பிரிவில் 2018ல் இந்தியா தங்கம் வென்று இருந்தது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel