21st SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
- மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் இந்த சட்டமசோதாவுக்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாலாம் பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.
- மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் முன்னிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 215 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒருவர் கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. இது வரலாற்று நிகழ்வு என மாநிலங்களவை தலைவர் குறிப்பிட்டு பேசினார்.
- மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படட்டதை தொடர்ந்து, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் அந்த சட்ட மசோதா செயலாக்கம் பெரும்.
- மக்கள் தொகை கனக்கடுப்பு, மக்களவை தொகுதிகள் மறுவரையறை ஆகியவை செய்த பின்னர் 2026இல் இந்த மசோதா செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டமான கிசான் சம்மான் நிதி (பி.எம்-கிசான்) திட்டத்திற்கான செயற்கை நுண்ணறிவு உரையாடல் உதவி அமைப்பை மத்திய வேளாண் அமைச்சகம் புதுதில்லியில் அறிமுகப்படுத்தியது.
- செயற்கை நுண்ணறிவு உரையாடல் (ஏஐ சாட்பாட்) அறிமுகம், பிஎம்-கிசான் திட்டத்தின் செயல்திறனை அதிகரிக்கும்.
- தற்போது, இந்த சாட்பாட் சேவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கிறது. விரைவில் பெங்காலி, ஒடியா, தெலுங்கு, தமிழ், மராத்தி ஆகிய மொழிகளிலும் இந்த சேவை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.