18th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஹொய்சளர் கோவில்
- ஹொய்சளர்கள் கோவில்களின் அற்புதமான புனிதச் சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஹொய்சளர்களின் கோயில்கள் காலத்தால் அழியாத அழகு மற்றும் நுணுக்கமான கலைத் திறன்களைக் கொண்டுள்ளன. இவை இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் நம் முன்னோர்களின் அசாதாரண கைவினைத்திறனுக்கு சான்றாகும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஹொய்சளர்களின் புனிதச் சின்னங்கள் சேர்க்கப்பட்டதற்குப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
- மக்களவையில் இன்று (18.09.2023) நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை சிறப்பு அமர்வு நடைபெறுகிறது.
- இதில் அவையில் உரையாற்றிய பிரதமர், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நடவடிக்கைகள் மாற்றப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர இன்று ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
- பாதுகாப்பு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான இந்தியா-மலேசியா கூட்டு துணைக் குழுவின் 10வது கூட்டம் இன்று (18-09-2023) புதுதில்லியில் நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் இணைச் செயலாளர் (கடற்படை அமைப்புகள்) திரு ராஜீவ் பிரகாஷ் மற்றும் மலேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் தொழில் பிரிவின் துணைச் செயலாளர் திரு எரிஸ் ஜெமாடி பின் தாஜுடின் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர்.
- இந்தக் கூட்டத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறி்த்து ஆய்வு செய்யப்பட்டதுடன், பரஸ்பர நலன் தொடர்பான கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- பாதுகாப்புத் துறை தொடர்பான தற்போதைய தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான பயனுள்ள மற்றும் நடைமுறை ரீதியிலான முன்முயற்சிகளை இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர்.