15th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
12 அதிநவீன சுகோய் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
- உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றாக இந்திய பாதுகாப்புப் படைகள் இருக்கிறது. பாதுகாப்புப் படைகளை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ச்சியாக புது ஆயுதங்களையும் கொள்முதல் செய்து வருகிறது.
- அதன்படி இப்போது சுமார் ₹45,000 கோடி மதிப்பிலான ஒன்பது கொள்முதல் திட்டங்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- அதன்படி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த 12 சுகோய் 30 MKI போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 11,000 கோடி ரூபாய் மதிப்பில் விமானங்கள் மற்றும் அது சார்ந்த கிரவுண்டு திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- அமலாக்கத்துறை இயக்குநராக 1984ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., கேடரான சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருந்து வருகிறார்.
- இவரது பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து இவரது பதவி காலம் இன்றுடன் (செப்.15) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.
- இந்நிலையில் புதிய இயக்குனராக ராகுல் நவீன் என்பவரை தற்காலிக இயக்குனராக மத்திய அரசு நியமித்துள்ளது.1993-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., கேடரான இவர் அமலாக்கத்துறையில் பல்வேறு உயர் பதவிகள் வகித்து வந்துள்ளார்.
- அதிகாரப்பூர்வமாக புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரையில், இவர் சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
- இந்நிலையில், தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் வங்கிக் கணக்குகளிலும் தலா ரூ.1000 செலுத்தப்பட்டு விட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சி அமைந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.