11th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தோனேஷிய பாட்மிண்டனில் பட்டம் வென்றார் கிரண் ஜார்ஜ்
- இந்தோனேஷியாவின் மேடன் நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 50-ம் நிலை வீரரான இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 82-ம் நிலை வீரரான ஜப்பானின் கூ தகாஹாஷியை எதிர்த்து விளையாடினார்.
- 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிரண் ஜார்ஜ் 21-19, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதினார்.
- 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். 36 வயதான அவர், கடந்த 2011, 2015, 2018-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்றிருந்தார்.
- மேலும் அமெரிக்க ஓபனில் அதிக வயதில் பட்டம் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் பெற்றள்ளார். ஒட்டுமொத்தமாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் கைப்பற்றியுள்ள 24-வது பட்டம் இதுவாகும். அவர், ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறையும், பிரெஞ்சு ஓபனில் 3 முறையும், விம்பிள்டனில் 7 முறையும் கோப்பையை வென்று குவித்துள்ளார்.
- கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் அதிக முறை பட்டங்கள் வென்றிருந்த ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையையும் சமன் செய்துள்ளார் ஜோகோவிச். இருவரும் தலா 24 பட்டங்களை வென்றுள்ளனர்.
- மேலும் ஒரே ஆண்டில் நடைபெறும் 4 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் 3 பட்டங்களை 4-வது முறையாக வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஜோகோவிச். இந்த ஆண்டில் அவர், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடர்களிலும் தற்போது அமெரிக்க ஓபனிலும் வாகை சூடியுள்ளார்.
- ஜி-20 உச்சி மாநாடு கடந்த 9, 10-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில் ஜி-20 உறுப்பு நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் சல்மான் பங்கேற்றார்.
- அவருடன் 7 அமைச்சர்கள், 100 தொழிலதிபர்கள் டெல்லிக்கு வந்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் சவுதி இளவரசர் சல்மானுக்கு நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் இளவரசர் சல்மானும் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதைத்தொடர்ந்து இந்திய, சவுதி அரேபிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
- இந்திய, சவுதி அரேபிய முதலீட்டாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளின் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இந்தியா, சவுதி இடையே 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
- தியாகி இமானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
- அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இமானுவேல் சேகரனாா், நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி செலவில் கட்டப்படும்.
- இமானுவேல் சேகரனாா், சிவகங்கை மாவட்டம் முதுகுளத்தூா் வட்டம் செல்லூரில் கடந்த 1924-ஆம் ஆண்டு அக்டோபா் 9-இல் பிறந்தாா். ஆங்கிலேயா்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றாா். மேலும், ஒடுக்கப்பட்டோா் விடுதலைக்காகவும் போராடினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், கடற்படை மனைவியர் நலச் சங்கத்தின் தலைவர் திருமதி கலா ஹரி குமார் மற்றும் இந்தியா தெற்காசியா மற்றும் எகிப்தின் உபர் வணிகத்திற்கான மூத்த மேலாளர் திரு அபினவ் மிட்டூ ஆகியோர் முன்னிலையில் இந்திய கடற்படை உபர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- உபர் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாடு முழுவதும் உள்ள கடற்படை வீரர்கள் மற்றும் குடும்பங்களின் தனிப்பட்ட பயணம், பயணத்திற்கு நம்பகமான, வசதியான, பாதுகாப்பான மற்றும் சிக்கனமான பயணத் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்திய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உபர் பின்வரும் நன்மைகளை விரிவுபடுத்தும்:-
- உபர் பயன்பாட்டில் தனிப்பயனாக்கப்பட்ட சுயவிவரம்.
- உச்ச அலுவலக நேரங்களில் கட்டணப் பாதுகாப்பை வழங்கும் பிரீமியர் எக்ஸிகியூட்டிவ் கேப் பிரிவு.
- உயர் மதிப்பிடப்பட்ட ஓட்டுநர்கள் கிடைப்பது.
- அனைத்து உபர் சவாரிகளிலும் பூஜ்ஜிய ரத்து கட்டணம்.
- 24x7 பிரீமியம் வணிக ஆதரவு.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்படைத் தளபதியின் 'கப்பல்கள் முதலில்' திட்டத்தின் கீழ் 'மகிழ்ச்சியான பணியாளர்கள்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது.
- இது ஆயுதப்படைகளில் ஒரு முதல் முயற்சியாகும். மாற்றத்திற்கான தொழில்நுட்பத்தைத் தழுவ வேண்டும் என்ற இந்திய அரசின் 'டிஜிட்டல் இந்தியா' தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் இது அமைந்துள்ளது.