Type Here to Get Search Results !

9th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


9th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கீழடி அகழாய்வில் சுடுமண் பாம்பு தலை கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. 9வது குழியில் நடந்த அகழாய்வில் 8 கிராம் எடையில், 1.5 செ.மீ உயரம் கொண்ட ஸ்படிக எடைக்கல்லை கண்டெடுத்தனர். 
  • இதுவரை கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பானை ஓடுகளை வகைப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி உடைந்த நிலையில் கிடைத்தது. 
  • ''சுடுமண் பாம்பின் கண்கள், வாய்ப்பகுதி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. இது 6.5 செமீ நீளம், 5.4 செமீ அகலம் 1.5 செமீ தடிமண் கொண்டதாக உள்ளது''.
இஸ்ரோவில் 'ககன்யான் திட்டம்' - விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி
  • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான, ககன்யான் திட்டத்தின்படி மனிதனை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில், நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரியில், இஸ்ரோ மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், பல்வேறு கட்டங்களில் சோதனை நடந்து வந்தது.
  • 2024ம் ஆண்டு ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்கான ககன்யான் ராக்கெட் திட்டத்தின், 2ஜி விகாஷ் இன்ஜின் சோதனை பணகுடி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில், 670 வினாடிகள் தொடர்ந்து நடந்து வெற்றி பெற்றது.
கேரளம் என பெயர் மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம்
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்தார்.
  • தீர்மானத்தை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து அவர் பேசியதாவது: மலையாளத்தில் 'கேரளம்' என்ற பெயரிலும், பிற மொழிகளில் 'கேரளா' என்ற பெயரிலும் நமது மாநிலம் அழைக்கப்படுகிறது. 
  • ஆனால், நமது மாநிலத்தின் பெயர் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் 'கேரளா' என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ் இதை 'கேரளம்' என்று திருத்தம் செய்து உடனடி பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. 
  • அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel