6th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டி - பிரனோய் 2ம் இடம்
- ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனோய் தோல்வி கண்டு வெளியேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பாட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனோய் 9-21, 23-21, 20-22 என்ற கணக்கில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
- அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
- இதில் தமிழகத்தில் அரக்கோணம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, கரூர், மயிலாடுதுறை, நாகர்கோவில், பெரம்பூர், போத்தனூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 18 ரயில்நிலையங்கள் ரூ.515 கோடியில் புதுப்பிக்கப்படுகின்றன.
- கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலுக்கு மகாகவி பாரதியார் மண்டபம் என்று புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார்.
- தொடர்ந்து மகாகவி பாரதியாரின் திருவுருவப் படத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பலூர் எம்.பி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ரிஸ்க் ஃபைவ் (RISC-V) வழியில் இந்தியாவின் மின்னணுவியல் எதிர்காலம்' என்பதை விளக்கும் வகையில் 'டிஜிட்டல் இந்தியா RISC-V' என்ற ஒருநாள் கருத்தரங்கு சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி மெட்ராஸ்) இன்று (6 ஆகஸ்ட் 2023) நடைபெற்றது.
- மதிப்பிற்குரிய கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்களின் நுண்ணறிவுமிக்க தொழில்நுட்ப உரைகள், உள்நாட்டுத் தயாரிப்பான ரிஸ்க்-ஃபைவ் பிராசசர்களின் விற்பனைக் காட்சியகம், கலந்துரையாடல், சிறப்பு முதலீட்டாளர் சந்திப்பு போன்றவை இக்கருத்தரங்கில் இடம்பெற்றிருந்தன.
- இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன.
- காணொலி வாயிலாக மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர் இதில் பங்கேற்றார்.
- ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி ஆகியோருடன் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- தன்னிறைவு லட்சியத்துடன் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முன்னேற்றங்களை அடைய உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
- அதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் இந்தியா ரிஸ்க் ஃபைவ் (RISC-V) மைக்ரோபிராசசர் (DIR-V) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எதிர்கால இந்தியாவிற்கும், உலகிற்கும் பயனளிக்கும் மைக்ரோ பிராசசர்களை டிசம்பர் 2023-க்குள் உருவாக்கி தொழில்ரீதியாக சிலிக்கான் மற்றும் வடிவமைப்பில் வெற்றிபெறுவது இத்திட்டத்தின் இலக்காகும்.