31st JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
காஞ்சியில் ரூ.1,600 கோடியில் செல்போன் உதிரிபாக தயாரிப்பு மையம் - முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
- சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ சந்தித்து, தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதித்தார்.
- அப்போது, காஞ்சிபுரத்தில் செல்போன் உதிரிபாக தயாரிப்பு மையத்தை நிறுவுவதற்காக ரூ.1,600 கோடி முதலீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
- மேலும், இந்த முதலீட்டுக்காக தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மற்றும்பாக்ஸ்கான் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ஏர் இந்தியா லிமிடெட் மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ) ஆகிய நிறுவனங்களுக்கு முறையே 470 மற்றும் 500 விமானங்களை இறக்குமதி செய்ய (வெளிநாசுகளில் இருந்து வாங்க) சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
- விமானங்களின் உண்மையான இறக்குமதிக்கு தடையில்லா சான்று வழங்கும் போது அவற்றை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
- விமான நிறுவனங்களின் இன்டக்ஷன் திட்டத்தின்படி, 2023-2035 காலகட்டத்தில் விமானங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க (இறக்குமதி செய்ய) உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- பார்க்கிங் இடங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக விமான நிறுவனங்கள் தங்கள் திட்டத்தை விமான நிலைய செயல்பாட்டு நிறுவனங்களுடன் (ஆபரேட்டர்கள்) பகிர்ந்து கொள்ளுமாறு டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது.