29th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் உள்ளிட்ட 7 வகையான தனிமங்கள் இருப்பதை சந்திரயான் - 3 விண்கலம் கண்டுபிடிப்பு
- நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோவரில் உள்ள Laser-Induced Breakdown Spectroscope (LIBS) என்ற கருவியி நிலவின் மேற்பரப்பில் சல்பர் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்து உள்ளது.
- மேலும் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மங்கனிசு, சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதை ஏற்கெனவே எதிர்பார்த்தபடி உறுதி செய்துள்ளது இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ஹைட்ரஜனை தேடும் பணி நடந்து வருவதாக 'எக்ஸ்' சமூகவலைத்தள பக்கத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- தனிமங்களை கண்டுபிடித்த LIBS- என்ற கருவி பெங்களூருவில் இஸ்ரோவில் உள்ள எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (LEOS ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- குடியரசுத் தலைவர் மாளிகையில் (ஆகஸ்ட் 29, 2023) நடைபெற்ற நிகழ்வில் எஸ்தோனியா, உக்ரைன், புர்கினா பாசோ, நார்வே ஆகிய நாடுகளின் தூதர்களிடமிருந்து குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நியமனப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார். தங்களின் நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தவர்களின் விவரம்:
- 1. மேதகு திருமதி மார்ஜே லூப், எஸ்தோனியா குடியரசின் தூதர்
- 2. டாக்டர் அலெக்சாண்டர் போலிஷூக், உக்ரைன் தூதர்
- 3. டாக்டர் டிசைர் போனிஃபேஸ் சோம், புர்கினா பாசோவின் தூதர்
- 4. மேதகு திருமதி மே-எலின் ஸ்டெனர், நார்வே தூதர்
- சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா- நியூசிலாந்து அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது புதிய வழித்தடங்களின் திட்டமிடல், குறியீடு பகிர்வு சேவைகள், போக்குவரத்து உரிமைகள் மற்றும் திறன் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கும்.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா மற்றும் நியூசிலாந்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சித் துறை, வேளாண்துறை, உயிரிப்பாதுகாப்பு, நிலத் தகவல், ஊரக சமுதாயத்தினர் நலத் துறை அமைச்சர் திரு டேமியன் ஓ' கானர், ஆகியோர் முன்னிலையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜீவ் பன்சால் மற்றும் நியூசிலாந்து தூதர் திரு டேவிட் பைன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- மே 1, 2016 அன்று ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே விமான சேவைகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவை தொடர்பான தற்போதைய ஏற்பாடுகள் குறித்து நியூசிலாந்து அரசும், இந்திய அரசும் மறுஆய்வு செய்துள்ளன.
- கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான சிவில் விமானப் போக்குவரத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்து விமான நிறுவனம் இந்தியாவில் புதுதில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய ஆறு இடங்களுக்கும் எத்தனை சேவைகளையும் இயக்கலாம்.
- ஆக்லாந்து, வெலிங்டன், கிறைஸ்ட்சர்ச் மற்றும் நியூசிலாந்தில் உள்ள மேலும் மூன்று இடங்களுக்கு இந்தியக் குடியரசின் எந்த வகையான விமானங்களையும் இந்திய விமான நிறுவனங்கள் இயக்கலாம்.
- மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா , அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிப்பதற்கான இயக்கத்தின் ஒரு பகுதியாக 'விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை புதுதில்லியில் இன்று (29-08-2023) தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் மக்களிடையே, குறிப்பாக பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 2047 ஆம் ஆண்டிற்குள் அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிப்பதற்கான இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது.
- இந்த இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பகுதிகளில் உள்ள 40 வயதிற்குட்பட்ட 7 கோடி மக்களை பரிசோதனைக்கு உட்படுத்துதல் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- 2023 ஜூலை 1அன்று மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்த இயக்கம் முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
- நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், நித்தி ஆயோக் மற்றும் இந்தியாவில் உள்ள ஐநா வளர்ச்சித் திட்டம் (யு.என்.டி.பி இந்தியா) ஆகியவை தரவு அடிப்படையிலான கண்காணிப்பு, முன்னேறும் மாவட்டங்கள் மற்றும் வட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி திரு பி.வி.ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில், நித்தி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த மூத்த ஆலோசகர் டாக்டர் யோகேஷ் சூரி மற்றும் இந்தியாவில் உள்ள ஐநா வளர்ச்சித் திட்டப் பிரதிநிதி திருமதி ஷோகோ நோடா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு கையெழுத்தாகியுள்ளது. தேசிய மற்றும் அதற்கு அடுத்த நிலைகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவது மற்றும் கண்காணிப்பை ஒருங்கிணைப்பதற்கான அமைப்பாக நித்தி ஆயோக் உள்ளது.
- ஐ.நா அமைப்பில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் ஐநா வளர்ச்சித் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.