28th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.100 நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்
- ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில், 1923 மே 28ல் பிறந்தவர், என்.டி.ராமாராவ்.தெலுங்கில், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை துவக்கி ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.
- இந்நிலையில், ராமாராவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், விழா நடந்தது. இதில், அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.
- அப்போது, ராமாராவின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். நாணயத்தின் ஒருபுறம் அசோக சக்கரம், மறுபுறம் என்.டி.ராமாராவ் உருவத்துடன், 'நந்தமுரி தாரக ராமா ராவ் சதா ஜெயந்தி' என்ற வாசகம் உள்ளது.
- நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புமாறு, உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
- இதன்படி, ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க வகை செய்யும் வேலை வாய்ப்பு திருவிழாவை (ரோஜ்கார் மேளா) பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார்.
- இதன்படி மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு அவர் பணி நியமன ஆணைகளை காணொலி மூலம் வழங்கி வருகிறார்.
- இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் 45 நகரங்களில் வேலை வாய்ப்பு திருவிழா நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில், மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுதப்படைப் பிரிவு (சிஎபிஎப்) பணிக்கு தேர்வான 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- இவர்கள் சிஆர்பிஎப், பிஎஸ்எப், சஷாஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி), அசாம் ரைபிள்ஸ், சிஐஎஸ்எப், ஐடிபிபி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் டெல்லி போலீஸ் உள்ளிட்டவற்றில் காவலர் (ஜெனரல் டூட்டி), உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியில் சேர உள்ளனர்.
- மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமையில், மேற்கு மண்டல கவுன்சிலின், 26வது கூட்டம், குஜராத் மாநிலம், காந்திநகரில் நடந்தது.
- இந்த சந்தர்ப்பத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலகத்தின் https://iscs-eresource.gov.in மின்-வள வலை தளத்தை திரு. அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மண்டல கவுன்சில்களின் செயல்பாட்டிற்கு உதவும்.
- இந்தக் கூட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநில முதலமைச்சர்கள் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூவின் நிர்வாகிகள், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் மற்றும் மேற்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்தின் செயலாளர் மற்றும் மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற 26வது மேற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் மொத்தம் 17 பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன, அவற்றில் 09 பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன.
- மீதமுள்ள பிரச்சினைகள் தேசிய நலன் சார்ந்த பிரச்சினைகள் உட்பட ஆழமான விவாதத்திற்குப் பிறகு கண்காணிக்கப்பட்டன. உறுப்பு மாநிலங்கள் குறிப்பாக மற்றும் ஒட்டுமொத்த நாடு சம்பந்தப்பட்ட சில முக்கிய பிரச்சினைகள், நிலம் தொடர்பான பிரச்சினைகள், நீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள், ஏலம் விடப்பட்ட சுரங்கங்களை இயக்குதல், பொது சேவை மையத்தில் பண வைப்பு வசதி, வங்கிக் கிளைகள் / அஞ்சல் வங்கி வசதிகள் மூலம் கிராமங்களை உள்ளடக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் / கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரித்தல், பாலியல் பலாத்கார மற்றும் போக்ஸோ சட்ட வழக்குகளை விரைந்து முடிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (எஃப்.டி.எஸ்.சி) திட்டத்தை செயல்படுத்துதல், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பை வழங்க மாநிலங்கள் பாரத் நெட் உள்கட்டமைப்பைப் பயன்படுத்துதல், 5 ஜி சேவையை எளிதாக்க மாநிலங்கள் தொலைத்தொடர்பு ஆர்.ஓ.டபிள்யூ விதிகளைப் பின்பற்றுதல், மோட்டார் வாகனங்கள் (வாகன ஸ்கிராப்பிங் வசதி திருத்தத்தின் பதிவு மற்றும் செயல்பாடுகள்) விதிகளை அமல்படுத்துதல், 2022, தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை (பிஏசிஎஸ்) வலுப்படுத்துதல் ஆகிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன