Type Here to Get Search Results !

27th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


27th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

B20 இந்தியா 2023 உச்சிமாநாட்டில் பிரதமர் உரை
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற பி 20 உச்சிமாநாடு இந்தியா 2023 இல் உரையாற்றினார். பி 20 உச்சிமாநாடு இந்தியா உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் வல்லுநர்களை பி 20 இந்தியா அறிக்கை குறித்து விவாதிக்கவும் அழைத்து வருகிறது. பி 20 இந்தியா அறிக்கையில் ஜி 20 க்கு சமர்ப்பிப்பதற்கான 54 பரிந்துரைகள் மற்றும் 172 கொள்கை நடவடிக்கைகள் அடங்கும்.
  • பிசினஸ் 20 (பி 20) என்பது உலகளாவிய வணிக சமூகத்துடனான அதிகாரப்பூர்வ ஜி 20 உரையாடல் மன்றமாகும். 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பி 20, ஜி 20 இன் மிக முக்கியமான ஈடுபாடு குழுக்களில் ஒன்றாகும். 
  • இதில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பங்கேற்பாளர்களாக உள்ளன. பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைத் தூண்டுவதற்கு உறுதியான செயல்பாட்டு கொள்கை பரிந்துரைகளை வழங்க பி 20 செயல்படுகிறது.
  • ஆகஸ்ட் 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெற்றது. இதன் கருப்பொருள் ஆர்.ஏ.ஐ.எஸ்.இ - பொறுப்பான, விரைவுபடுத்தப்பட்ட, புதுமையான, நிலையான மற்றும் சமமான வணிகங்கள். இதில், 55 நாடுகளைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் ஆய்வு
  • விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்ட கருவி ChaSTE நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை அளவிட்டு முதல் தகவலை பதிவு செய்துள்ளது.
  • ChaSTE கருவியின் மூலம் நிலவின் தென் துருவப்பகுதியில் உள்ள மணல் பரப்பின் வெப்பநிலை கண்டறியப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் சுமார் 10 சென்டிமீட்டர் வரை அளவிடுவதற்கான தன்மையை இந்த கருவி கொண்டுள்ளதாகவும் மற்றும் இதில் தனிப்பட்ட வெப்பநிலையை கண்டறியும் வகையில் சுமார் 10 சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
  • முதல் நிலை தகவலாக ChaSTE கண்டறிந்த வெப்பநிலை குறித்த தரவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதன்படி, 8 சென்டிமீட்டரில் அளவில் -10 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும், 1 சென்டிமீட்டர் அளவில் 50 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் இஸ்ரோ தரவுகளை வெளியிட்டுள்ளது.
  • நிலவின் தென் துருவப்பகுதியின் வெப்பநிலை குறித்த முதல் தரவு இது என்றும் மேலும் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ChaSTE கருவியை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Space Physics Laboratory குழு, Physical Research laboratory-வுடன் இணைந்து உருவாக்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
  • 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2வது 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கதை கைப்பற்றினார். 
  • உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளார் தடகள வீரர் நீரஜ் சோப்ரா.
  • இதனைத்தொடர்நது மகளிருக்கான 3000 மீட்டர் மகளிர் ஸ்டீப்பிள் சேஸ் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அவர் பந்தய தூரத்தை 9.15 நிமிடம் 31 நொடிகளில் கடந்து 11வது இடம் பிடித்தார். 
  • அவர் 11வது இடம் பிடித்தாலும் இது புதிய தேசிய சாதனை மட்டுமின்றி அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற தேவையான 9.23 நிமிடத்திற்குள் பந்தய தூரத்தை கடந்துள்ளார். ஆடவர் 4*400 தொடர் ஓட்டத்தில் இந்தியா 5ம் இடம் பிடித்தது.
பிரைட் ஸ்டார்-23 பயிற்சி
  • எகிப்தின் கெய்ரோ (மேற்கு) விமானப்படை தளத்தில் 2023 ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 16 வரை நடைபெற உள்ள பிரைட் ஸ்டார் -23 என்ற இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பலதரப்பு முப்படைகளின் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) குழு இன்று புறப்பட்டது.
  • அமெரிக்கா, சவுதி அரேபியா, கிரீஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவுகள் பங்கேற்கும் பிரைட் ஸ்டார் -23 பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இந்திய விமானப்படையில் ஐந்து மிக்-29, இரண்டு ஐ.எல்-78, இரண்டு சி-130 மற்றும் இரண்டு சி-17 ரக விமானங்கள் இடம்பெறும். 
  • இந்திய விமானப்படையின் கருட் சிறப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும், எண் 28, 77, 78 மற்றும் 81 படை பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்திய விமானப்படை விமானம், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 150 வீரர்களையும் ஏற்றிச்செல்லும்.
  • கூட்டு நடவடிக்கைகளை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை பயிற்சி செய்வதே இப்பயிற்சியின் நோக்கமாகும். 
  • எல்லைகளுக்கு அப்பால் பிணைப்பை உருவாக்குவதற்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், இத்தகைய தொடர்புகள் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையில் உத்தி சார்ந்த உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் வழங்குகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel