Type Here to Get Search Results !

25th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


25th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம்
  • நாகை மாவட்டம் திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அவர்களுடன் உரையாடினார்.
நில ஒருங்கிணைப்பு சட்டம் கவர்னர் ரவி ஒப்புதல்
  • தமிழக சட்டசபையில், இந்தாண்டு ஏப்., 21ல், 'தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் சட்டம் - 2023' நிறைவேற்றப்பட்டது. 
  • நீர் நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை, இயற்கை நிகழ்வுகளால் தன் பரப்பை விரிவாக்கி, போக்கை மாற்றிக் கொண்டால், அவற்றை பாதுகாக்க வேண்டும் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக, தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், அந்த நிலத்தை அரசு முடிவின்படி வழங்க வேண்டும். 
  • இந்த நிலப்பரிமாற்ற முறையை, சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்தவும், நீர் நிலையை பாதுகாக்கவும், இந்த சட்டம் வழிவகை செய்கிறது வணிகம், தொழில் சார்ந்த திட்டத்தை, 247 ஏக்கருக்கு குறையாத நீர்நிலைகள் உள்ள பகுதியில் செயல்படுத்த ஒருவர் விரும்பினால், அந்த திட்டத்திற்கு சிறப்பு அனுமதி கோரி, அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
  • அரசு திருப்தி அடைந்தால், எந்த திட்டத்தையும் சிறப்பு திட்டமாக அறிவிக்கலாம். இந்த சட்டத்திற்கு, பல்வேறு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த சட்ட முன்வடிவுக்கு, கவர்னர் ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசிதழில் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமா் மோடிக்கு கிரீஸின் உயரிய விருது
  • கிரீஸில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் ஹானா்' விருது வழங்கப்பட்டது.
  • கிரீஸ் அதிபா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடிக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வழங்கியதற்காக அந்நாட்டு அதிபா் கேத்தரினாவுக்கு இந்திய மக்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமா் மோடி கூறினாா்.  
  • இந்தியாவின் மதிப்பை சா்வதேச அளவில் உயா்த்துவதற்கும், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் அயராது உழைத்து வருவதற்காக இந்த விருது பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • எகிப்து, அமெரிக்கா, பஹ்ரைன், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் உயரிய விருதுகளையும் பிரதமா் மோடி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மகுமாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ்மணி நினைவாக குடியரசுத் தலைவர் தபால்தலையை வெளியிட்டார்
  • குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (25.08.2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ்மணியின் நினைவாக தபால் தலையை வெளியிட்டார். 
  • தாதி பிரகாஷ்மணியின் 16-வது நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறையின் 'மை ஸ்டாம்ப்' திட்டத்தின் கீழ் இந்த தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
கடற்படைக்கான 5 ஆதரவுக் கப்பல்களை வாங்க இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ. 19,000 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது
  • இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (ஹெச்.எஸ்.எல்) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இன்று (25-08-2023) கையெழுத்திட்டுள்ளது. 
  • இந்திய கடற்படைக்கு ஐந்து கடற்படை ஆதரவுக் கப்பல்களை (எஃப்.எஸ்.எஸ்) வாங்குவது தொடர்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 
  • இந்த ஒப்பந்த்த்தின் மொத்த மதிப்பு ரூ. 19,000 கோடி ஆகும். இந்த கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹெச்.எஸ்.எல் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்படுவதால், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு இலக்கை அடைவதற்கு இது ஒரு பெரிய ஊக்க சக்தியாக இருக்கும்.  
  • பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் குழு 26-08-2023 அன்று நடந்தகூட்டத்தில் இந்த கப்பல்களை வாங்க ஒப்புதல் அளித்தது. கடலில் உள்ள கடற்படை போர்க் கப்பல்களுக்கு எரிபொருள், நீர், வெடிமருந்துகள் போன்றவற்றைக் கொண்டு சென்று வழங்க இந்த எஃப்.எஸ்.எஸ் எனப்படும் ஆதரவுக் கப்பல்கள் பயன்படுத்தப்படும். 
  • இது இந்திய கடற்படை துறைமுகத்திற்கு வராமல் நீண்ட காலத்திற்கு கடலில் செயல்பட உதவும். இந்த ஆதரவுக் கப்பல்கள் கடற்படையின் செயல்பாட்டை மேம்படுத்தும். இந்த கப்பல்களை கடற்படையில் இணைப்பது, இந்திய கடற்படையின் திறனை கணிசமாக அதிகரிக்கும். 
  • இயற்கைப் பேரிடர் காலங்களில் மக்களை வெளியேற்றுவதற்கும், உதவி மற்றும் பேரிடர் நிவாரண (எச்.ஏ.டி.ஆர்) நடவடிக்கைகளுக்கும் இந்த கப்பல்களைப் பயன்படுத்த முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel