24th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2023
- ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான போல்வால்ட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நினா கென்னடியும், நடப்பு சாம்பியனும் ஒலிம்பிக் சாம்பியனுமான அமெரிக்காவின் கேட்டி மூனும் தலா 4.90 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்தனர். இதன் பின்னர் இருவருமே சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டனர். பின்லாந்தின் வில்மா முர்டோ 4.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
- ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்தின் ஜோஷ் கெர் தங்கப் பதக்கம் வென்றார். அவர், பந்தய தூரத்தை 3 நிமிடம் 29.38 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். நார்வே நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் இங்பிரிக்ட்சன் (3:29.65) வெள்ளிப் பதக்கமும், நர்வே கில்ஜே நோர்தாஸ் (3:29.68) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
- ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டன் வார்ஹோம் பந்தய தூரத்தை 46.89 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் கார்ஸ்டன் வார்ஹோம் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்த கைரோன் மெக்மாஸ்டர் 47.34 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் ராய் பெஞ்ஜமின் 47.56 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
- மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் டொமினிகாவின் மரிலிடி பாலினோ தங்கப் பதக்கம் வென்றார்.அவர், பந்தய தூரத்தை 48.76 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். போலந்தின் நடாலியா காஸ்மரேக், இலக்கை 49.57 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், பார்படாஸின் சடா வில்லியம்ஸ் 49.60 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
- Lமகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் பருல் சவுத்ரி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தகுதி சுற்றில் ஹீட் 2-ல் இடம் பெற்ற அவர், இலக்கை 9:24.29 விநாடிகளில் அடைந்தார். இதன் மூலம் ஸ்டீபிள்சேஸில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் பருல் சவுத்ரி. இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் லலிதா பாபர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். எனினும் அவர், இறுதிப் போட்டியில் 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் டைபிரேக்கர் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் போட்டி போட்டு விளையாடி வந்தனர்.
- முன்னதாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இறுதிப்போட்டியின் சுற்றுகள் டிராவில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து நேற்று (ஆக.24) டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது.
- பரபரப்பாக நடந்த இறுதி சுற்றின் முதல் ரவுண்டில் பிரக்ஞானந்தாவை ஜெயித்து மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற அடுத்த போட்டியில் பிரக்ஞானந்தாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
- பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து 'பிரிக்' கூட்டமைப்பை 2006-ஆம் ஆண்டில் நிறுவின. அக்கூட்டமைப்பில் 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைக்கப்பட்டவுடன், 'பிரிக்ஸ்' என மாறியது.
- வளா்ந்து வரும் பொருளாதார சக்திகள் இணைந்து உருவாக்கிய முக்கிய பன்னாட்டு கூட்டமைப்பாக பிரிக்ஸ் திகழ்ந்து வருகிறது. முக்கியமாக, அக்கூட்டமைப்பு சாா்பில் உருவாக்கப்பட்ட நியூ டெவலெப்மென்ட் வங்கியானது பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.
- ஆண்டுதோறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது.
- கரோனா தொற்று பரவல் காலத்தில்கூட கூட்டமைப்பின் மாநாடுகள் காணொலி வாயிலாக நடைபெற்றன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்கில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அதில் புதிய உறுப்பினா்களைக் கூட்டமைப்பில் இணைப்பது தொடா்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
- இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 நாடுகளைப் புதிய உறுப்பினா்களாக இணைத்துக் கொள்ள மாநாட்டில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
- அதன்படி, ஆா்ஜென்டீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அதிகாரபூா்வமாக இணையவுள்ளன.
- ராணுவ தளவாட கொள்முதல் குழு கூட்டம், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ரூ.7,800 கோடி மதிப்பிலான பல்வேறு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- இதன்படி, விமானப்படையின் செயல்திறனை அதிகரிக்க, எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர்களில் எலக்ட்ரானிக் போர்கருவிகளை வாங்கவும், அவற்றை நிறுவவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கருவிகள் பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட உள்ளது.
- இதே போல, இலகுரக இயந்திர துப்பாக்கி, கடற்படையின் எம்எச்-60ஆர் ஹெலிகாப்டருக்கான ஆயுதங்கள், ஆளில்லா கண்காணிப்பு, வெடிமருந்துகள், எரிபொருள் வழங்குதல் மற்றும் போர்க்களத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்கு உதவும் தானியங்கி கவச வாகனங்கள் ஆகியவற்றை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- புராஜெக்ட் சக்தி திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளை வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல்கள் அனைத்தும் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பெறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய மல்யுத்த சங்கத் (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக பிரிஜ் பூஷன் சிங் இருந்தார். பாலியல் புகாரில் சிக்கிய இவருக்கு எதிராக மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போர்க்கொடி துாக்கினர்.
- மத்திய அரசு தலையிட, போராட்டத்தை கைவிட்டனர்.மல்யுத்த சங்கத்தை கடந்த ஏப். 27 முதல் தற்காலிக குழு நிர்வகிக்கிறது. 45 நாளில் நிர்வாகிகள் தேர்தலை நடத்தும்படி ஒருங்கிணைந்த மல்யுத்த கூட்டமைப்பு (யு.டபிள்யு.டபிள்யு.,), டபிள்யு.எப்.ஐ.,க்கு எச்சரிக்கை விடுத்தது.இதனால் தேர்தலை நடத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்தது.
- இத்தேர்தலில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு மாநில சங்கங்கள் கோர்ட்டில் முறையிட்டதால் தேர்தல் தடைபட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்தாததால், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, யு.டபிள்யு.டபிள்யு., தடை விதித்தது.
- இது உடனடியாக அமலுக்கு வந்தது. தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை, இந்த தடை தொடரும்.
- புதிய சிக்கல்தடை காரணமாக இந்திய நட்சத்திரங்கள் சர்வதேச போட்டிகளில் தேசியக் கொடியுடன் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், சர்வதேச மல்யுத்த சங்க கொடியுடன் தான் போட்டிகளில் விளையாட வேண்டும்.