21st AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 'முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டம்' தொடக்கம்
- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவும் வகையிலும் 'முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்' சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.
- இந்த திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம், திட்டத்தின் அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.
- திட்டத் தலைவர், 40 பசுமைஆர்வலர்கள், 4 ஆராய்ச்சி இணையாளர்கள் ஆகியோர் தகுதியின் அடிப்படையில் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- சென்னை அருகே உள்ள பேரூரில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் ரூ.4,276.44 கோடியில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திட்டத்துக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
- தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நிலையமாக இது அமைய உள்ளது. பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
- வெனிசூலா, கொலம்பியா, அல்ஜீரியா, பிரேசில், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதர்கள்/ ஹை கமிஷனரிடமிருந்து குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு (ஆகஸ்ட் 21, 2023) நடைபெற்ற நிகழ்வில் நியமனப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார். தங்களின் நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தவர்கள்:
- 1. மேதகு திருமதி கபயா ரோட்ரிக்ஸ் கோன்சலஸ், வெனிசுலா பொலிவேரியன் குடியரசின் தூதர்
- 2. மேதகு விக்டர் ஹியூகோ எச்செவெரி ஜராமிலோ, கொலம்பியா குடியரசின் தூதர்
- 3. மேதகு அலி அச்சூய், அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதர்
- 4. மேதகு கென்னத் ஃபெலிக்ஸ் ஹசின்ஸ்கி டா நோப்ரேகா, பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் தூதர்
- 5. மேதகு பிலிப் கிரீன், ஆஸ்திரேலிய ஹை கமிஷனர்
- 6. மேதகு திருமதி மேரி லூயிசா ஜெரார்ட்ஸ், நெதர்லாந்து தூதர்
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திஅமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசின் மினி ரத்னா (வகை - 1) நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐ.ஆர்.இ.டி.ஏ) இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் செயல்திறன் அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், நிதி அமைச்சகத்தின் பொது நிறுவனங்கள் துறையால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளில் ஐ.ஆர்.இ.டி.ஏ அடைய விரும்பும் தொலைநோக்கு உத்தி இலக்குகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.
- இந்த ஒப்பந்தத்தின்படி, 2023-24 நிதியாண்டில் ரூ.4,350 கோடியும், 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.5,220 கோடியும் வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ.3,361 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.3,482 கோடி வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஒப்பந்தத்தில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திஅமைச்சகத்தின் (எம்.என்.ஆர்.இ) செயலாளர் திரு பூபிந்தர் சிங் பல்லா, ஐ.ஆர்.இ.டி.ஏ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (சி.எம்.டி) திரு பிரதீப் குமார் தாஸ் ஆகியோர் ஆகஸ்ட் 21, 2023 அன்று புதுதில்லியில் உள்ள அடல் அக்ஷய் உர்ஜா பவனில் கையெழுத்திட்டனர். இவற்றின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.