Type Here to Get Search Results !

20th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


20th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஸ்ரீநகர் துலிப் தோட்டம் - ஆசியாவிலேயே மிகப்பெரியது என உலக சாதனை புத்தகம் அங்கீகாரம்
  • ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜபர்வான் மலையடிவாரத்தில் இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் தோட்டம், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் முயற்சியால் கடந்த 2007-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • 74 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர் தோட்டம் ஆகும். 68 வகையான மொத்தம் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் இதில் பூத்துக் குலுங்குகின்றன. இந்த தோட்டம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
  • இந்நிலையில், இந்த தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியது என உலக சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. ஸ்ரீநகரில் நடைபெற்ற விழாவில் இதற்கான சான்றிதழை காஷ்மீர் நிர்வாக செயலாளர் (மலர், தோட்டம், பூங்கா) பயாஸ் ஷேக்கிடம் உலக சாதனை புத்தக நிறுவன தலைவர் மற்றும் சிஇஓ சந்தோஷ் ஷுக்லா வழங்கினார்.
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டி 2023
  • ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடைபெற்றது.
  • இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 3-1 என்ற கணக்கில் ஹாங்காங்கின் ஏனா குவாங்கை வீழ்த்தினார்.
  • முன்னதாக நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் டோய்ஸ் லீயையும், அரை இறுதி ஆட்டத்தில் விட்னி இசபெல் வில்சனையும் வீழ்த்தினார் அனாஹத்சிங். கடந்த ஆண்டு தாய்லாந்தில்நடைபெற்ற தொடரிலும் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து 2023 - சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்
  • பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 9-வது பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து இணைந்து நடத்தின. இந்த கால்பந்து திருவிழா கடந்த மாதம் 20-ம் தேதி (ஜூலை) தொடங்கி இன்று (ஆகஸ்ட் 20) வரை நடைபெற்றது. 
  • மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரீட்சை மேற்கொண்டன. 8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. 
  • மொத்தம் 64 போட்டிகள். இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றிருந்த ஸ்பெயின் மற்றும் 'டி' பிரிவில் இடம் பெற்ற இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
  • ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார் ஸ்பெயின் அணியின் ஓல்கா கார்மோனா. இதனால் ஸ்பெயின் அணி 1 - 0 என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.
  • இந்த தொடரில் 5 கோல்கள் மற்றும் 1 அசிஸ்ட் செய்தமைக்காக தங்கக் காலணி விருதை ஜப்பான் வீராங்கனை ஹனடா மியாசாவா வென்றார். 
  • தங்கப் பந்து விருதை ஸ்பெயின் அணியின் எய்ட்டனா பான்மதி வென்றார். கோல்டன் கிளவ் விருதை இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி ஏர்ப்ஸ் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel