10th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.515 கோடியில் கோத்ரெஜ் நிறுவனத்தின் புதிய ஆலை - முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
- கோத்ரெஜ் குழுமத்தின் ஒரு அங்கமான கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி அலகுகளை நிறுவியுள்ளது.
- தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகரில் ஒரு உற்பத்தி மையத்தை நிறுவியுள்ள இந்நிறுவனம், மேம்பட்ட உற்பத்தி மையத்தின் ஒரு சிறப்புமிக்க நிறுவனம் என்பதை இலக்காகக் கொண்டு ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலையை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
- அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ.515 கோடி முதலீடு மற்றும் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முக அழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றுக்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது.
- இந்தத் திட்டத்தில், 50 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும். மேலும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இத்திட்டத்தை நிறுவ, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு மற்றும் கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்திய கடற்படையின் உள்நாட்டு முன்னணி போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி மற்றும் ஐ.என்.எஸ் கொல்கத்தா ஆகியவை ஆகஸ்ட் 11 முதல் 21 வரை சிட்னியில் திட்டமிடப்பட்டுள்ள மலபார் 2023 கடற்பயிற்சியில் அமெரிக்க கடற்படை, ஜப்பான் கடல்சார் தற்காப்பு படை மற்றும் ராயல் ஆஸ்திரேலிய கடற்படை ஆகியவற்றின் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் பங்கேற்கின்றன.
- மலபார் தொடர் கடல்சார் பயிற்சி 1992 ஆம் ஆண்டில் இந்திய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படைக்கு இடையிலான இருதரப்பு பயிற்சியாகத் தொடங்கியது மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நான்கு முக்கிய கடற்படைகளை உள்ளடக்கியதாக பல ஆண்டுகளாக இருக்கிறது.
- 2020-ஆம் ஆண்டு பயிற்சியில் ராயல் ஆஸ்திரேலிய கடற்படை முதன் முறையாக பங்கேற்றது. மலபார் 2023 கடற்பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.