8th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ராஜஸ்தானின் பிகானீரில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08-07-2023) அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- சுமார் ரூ. 11,125 கோடி செலவிலான அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமை விரைவுச்சாலை பிரிவு, சுமார் ரூ.10,950 கோடி மதிப்புள்ள பசுமை எரிசக்தி வழித்தடத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற பாதையின் முதல் கட்டம், சுமார் ரூ.1,340 கோடி செலவில் பவர் கிரிட் உருவாக்கும் பிகானீர் முதல் பிவாடி வரையிலான பரிமாற்ற வழித்தடம் ஆகியவை அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்களில் அடங்கும்.
- பிகானீரில் 30 படுக்கைகள் கொண்ட புதிய தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (இ.எஸ்.ஐ.சி) மருத்துவமனை, சுமார் ரூ.450 கோடி செலவில் பிகானீர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள், 43 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரு - ரத்தன்கர் பிரிவில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆகியவற்றுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
- தெலுங்கானா மாநிலத்தில் சுமார் ரூ 6,100 கோடி மதிப்பிலான பல முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாரங்கலில் அடிக்கல் நாட்டினார்.
- ரூ 5,550 கோடி மதிப்பிலான 176 கிமீ நீள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும், காசிப்பேட்டையில் ரயில்வே உற்பத்தி அலகும் ரூ 500 கோடி செலவில் உருவாக்கப்படும். பத்ரகாளி கோயிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜையும் செய்தார்.
- ரூ 5,550 கோடி மதிப்பிலான 176 கிமீ நீள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். திட்டங்களில் 108 கிமீ நீளமுள்ள மஞ்சேரியல் - வாரங்கல் பகுதி நாக்பூர் - விஜயவாடா வழித்தடத்தில் அடங்கும்.
- இந்தப் பிரிவானது மஞ்சேரியலுக்கும் வாரங்கலுக்கும் இடையிலான தூரத்தை சுமார் 34 கிமீ குறைக்கும், இதனால் பயண நேரம் குறைகிறது 68 கிமீ நீளமுள்ள கரீம்நகர் - வாரங்கல் பிரிவை தற்போதுள்ள இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலை அமைப்பாக மேம்படுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
- இது ஹைதராபாத்-வாரங்கல் தொழில் வழித்தடம், காகதியா மெகா ஜவுளி பூங்கா, வாரங்கல் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றுக்கான இணைப்பை மேம்படுத்த உதவும்.
- காசிப்பேட்டையில் உள்ள ரயில்வே உற்பத்திப் பிரிவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ 500 கோடி செலவில் உருவாக்கப்படும், நவீன உற்பத்தி அலகு ரோலிங் ஸ்டாக் உற்பத்தி திறனை மேம்படுத்தும். வேகன்களின் ரோபோடிக் பெயிண்டிங், அதிநவீன இயந்திரங்கள் மற்றும் நவீன பொருள் சேமிப்பு மற்றும் கையாளுதலுடன் கூடிய ஆலை போன்ற சமீபத்திய தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் வசதிகளுடன் இது பொருத்தப்பட்டிருக்கும். இது உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் துணை அலகுகளின் வளர்ச்சிக்கு உதவும்.
- சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இங்கு 86 அரங்குகளில் 188 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட் களும், 90 அரங்குகளில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகள், அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
- சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட தின்பண்டங்கள் உள்ளிட்டவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
- விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வணிகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன. வாங்குபவர்- விற்பனையாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது.
- முன்னதாக வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார்.
- ஐரோப்பிய நாடுகளில் தற்போதுள்ள மிகப் பெரும் பிரச்னை, புலம்பெயர்ந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தான்.போர் மற்றும் பிற காரணங்களால் பல நாடுகளில் இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் புலம் பெயர்ந்து வருகின்றனர்.
- சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்து முயற்சித்து வருகிறது.
- நான்கு கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணியில், பிரதமர் மார்க் ருட்டேவின் இந்த முயற்சிக்கு மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
- கடந்த, 2010ல் பதவியேற்ற ருட்டே, நெதர்லாந்தின் நீண்டகால பிரதமராக உள்ளார். கடந்த, 2020 ஜனவரியில் இந்தக் கூட்டணி அரசு பதவியேற்றது.
- அப்போதிருந்தே, புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக மிகத் தீவிர ஆலோசனைகள் நடந்த நிலையில், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
- இதையடுத்து, தன் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சரவையை கலைப்பதாக ருட்டே அறிவித்தார்.
- லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான பார்லிமென்ட் குழு, மங்கோலியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டது.இந்தப் பயணத்தின்போது, மங்கோலியாவில் உள்ள புத்த மதத்தின் கன்டான் தேக்சென்லிங் பிரிவின் மடத்துக்கு ஓம்பிர்லா சென்றார்.
- அவரை புத்த மதத் தலைவர்கள் வரவேற்றனர். அப்போது, இந்தியா மற்றும் மங்கோலியாவுக்கு இடையே உள்ள புத்த மதத் தொடர்புகள் குறித்து ஓம்பிர்லா குறிப்பிட்டார்.
- இரு நாடுகளுக்கும் இடையே புத்த மதத்தை பரப்புவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக, புத்த மதத் தலைவர் கம்பா நோமுன் கானுக்கு, கலாசார உறவுக்கான இந்திய கவுன்சிலின் புத்தர் விருதை ஓம் பிர்லா வழங்கினார்.
- இதைத் தொடர்ந்து, புத்த மதத்தின் பொதுப் பிரிவு மடத்துக்கும் ஓம் பிர்லா சென்றார். அங்கு நிறுவப்பட்டுள்ள மஹாத்மா காந்தியின் சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். மங்கோலியாவின் நதாம் விழாவில் ஓம் பிர்லா தலைமையிலான இந்தியக் குழு பங்கேற்றது.
- மங்கோலிய போர்க் கலை, பாரம்பரிய கலைகள், உணவுகள் மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற அந்த நாட்டின் பார்லிமென்ட் சபாநாயகர் கோம்போஜாவின் ஜன்டான்ஸ்தார், ஓம் பிர்லாவுக்கு குதிரை ஒன்றை பரிசாக அளித்தார்.
- அதற்கு, 'விராட்' என பெயர் சூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு பார்லிமென்ட் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.