5th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய கூடைப்பந்து சங்க தலைவரானார் ஆதவ் அர்ஜுனா
- இந்திய கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 39 வாக்குகளில் ஆதவ் அர்ஜுனா 38 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
- முன்னாள் வீரரும், மத்திய பிரதேச கூடைப்பந்து சங்கத்தின் தலைவருமான குல்விந்தர் சிங், பொதுச் செயலாளராக தேர்வானார்.
- துணைத் தலைவர்களாக அஜய், டொனால்ட் ஸ்டீவன் வஹ்லாங், லால்ரினாவ்மா ஹ்னாம்டே, மனோகர குமார், நார்மன் ஐசக், ரலின் டி சோசா, சீமா சர்மா ஆகியோரும் பொருளாளராக டி.செங்கல்ராய நாயுடுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
- துணை செயலாளராக சக்ரவர்த்தி, முனிஷ் சர்மா, பிரதீப் குமார், பிரகாஷ் சண்டூ, சூர்யா சிங் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
- உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்ந்து 34 நீதிபதிகள் பணியிடம் உண்டு. கடந்த மாதம் 3 நீதிபதிகள் ஓய்வு பெற்றதால் தற்போது 31 பணியிடம் மட்டுமே உள்ளது.
- இந்த நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் கூடி ஆலோசனை நடத்தியது.
- அப்போது தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கடநாராயண பாட்டி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்தது.
- இதில் நீதிபதி உஜ்ஜல் புயான் அசாம் மாநிலத்தில் கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக 2011 அக்டோபர் 17ம் தேதி நியமிக்கப்பட்டவர். நீதிபதி வெங்கடநாராயண பாட்டி ஆந்திராஉயர் நீதிமன்ற நீதிபதியாக 2013 ஏப்ரல் 12ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆளில்லா விமானப்போக்குவரத்து முறை, புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய விமான இயக்கத்திற்காக ஐரோப்பிய யூனியன் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமையுடன் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இருதரப்பு விமானப்போக்குவரத்து இயக்குநரகங்களுக்கிடையே ஆளில்லா விமானப்போக்குவரத்து, புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய விமானப்போக்குவரத்து ஒருங்கிணைப்பில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்தும்.
- மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் ஆளில்லா விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், ஐரோப்பிய யூனியன், விமானப்போக்குவரத்து முகமை மூலம் பயிற்சி திட்டங்கள், பயிலரங்குகள், மாநாடுகள் நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது.
- புதுதில்லியில் 2023 ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற ஐரோப்பிய யூனியன்- இந்திய விமானப் போக்குவரத்து மாநாட்டின் போது ஆளில்லா விமானப் போக்குவரத்து முறை மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய விமான இயக்கத்திற்கான திட்டத்தில் ஐரோப்பிய யூனியன் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமையுடன், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் கையெழுத்திட்டிருந்தது.
- தனிநபர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான உரிமை மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்காகவும் தனிநபர்களின் உரிமையை அங்கீகரிக்கும் விதத்தில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2023 உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த சட்டத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
- இதில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்த விலக்கு எதுவும் அளிக்கப்படவில்லை. இதில் ஏற்படும் சச்சரவுகளை தரவு பாதுகாப்பு வாரியம் இறுதி செய்யும். யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் சிவில் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெற்று கொள்ளலாம்.