25th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
புதுடில்லி நிர்வாக மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- புதுடில்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால், அதன் நிர்வாக அதிகாரம் முழுதும் துணைநிலை கவர்னர் வசம் உள்ளதால் புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
- இதை தொடர்ந்து, தேசிய தலைநகர் குடிமைப்பணி ஆணையத்தை உருவாக்கும் அவசர சட்டத்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் பிறப்பித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது.
- இந்நிலையில் இன்று (25ம் தேதி) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்ட மசோதாவால் புதுடில்லியில் உள்ள அரசு அதிகாரி களின் பணி நியமனம், இட மாற்றம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசு வசம் இருக்கும்.
- உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடன் வழங்கும் நிறுவனம் தான் ஐஎம்எப். அதாவது சர்வதே நாணய நிதியம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இந்த ஐஎம்எப் அடிக்கடி பல்வேறு நாடுகளை ஆய்வு செய்து பொருளாரா நிலைகள் குறித்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
- ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்டது. உள்நாட்டு உற்பத்தி எந்த நாடுகளில் எப்படி இருக்கிறது. வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது.
- இதன் அடிப்படையிலேயே கடன்கள் வழங்குவதையும் அந்நிறுவனம் செய்து வருகிறது.பல்வேறு நாடுகளும் ஐஎம்எப்பின் ஆய்வை உன்னிப்பாக கவனிக்கும்.
- அந்த வகையில் புதிய ஆய்வின் முடிவினை ஐஎம்எப் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ஆண்டில் உலகத்தின் வளர்ச்சி சற்று மேம்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
- இதற்கு முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட பல அதிரடியான (சிக்கன) பொருளாதார நடவடிக்கைகள் காரணம் என்று கூறியுள்ளது. எனினும் இனிவரும் காலங்களில் பல்வேறு சவால்கள் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
- ஐபிஎப் கணிப்பின் படி 2023 ஆம் ஆண்டில் உலக அளவில் ஜிடிபி வளர்ச்சி 3.0% என்று கணித்துள்ளது. ஏப்ரல் மாதம் அறிவித்ததை விட 0.2 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. எனினும் 2024ம் ஆண்டில் 3.0% என்ற அளவிலேயே இருக்கும் என்றும் கணித்துள்ளது
- இந்தியா குறித்து ஐஎம்எப் கணிப்புகளை பார்க்கும் போது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதம் ஆக இருக்கும் என்று கூறியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் கணித்ததை விட 0.2 சதவீதம் அதிகமாகும்.
- 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சி இந்தியாவில் இருந்தது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால் கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருந்தது.
- ஆனால் இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அதை விட குறைவாக, அதாவது 6.1 சதவீதம் என்று இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஐஎம்எப் கணித்துள்ளது.
- வரும் மாதங்களில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. 2022ல் இந்தியாவின் வளர்ச்சி 7.2% ஆக இருந்தது. தற்போது 6.1 சதவீதமாக சரிந்துள்ளது.
- இந்தியாவை பற்றி மட்டுமல்ல.. அமெரிக்கா குறித்தும் ஐஎம்எப் கணித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் மாதத்தில் இருந்ததைவிட 0.2 சதவீத அதிகமாக இருக்கும் என ஐஎம்எப் கூறியுள்ளது.
- அதாவது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.2 சதவீதமாகவே இருக்கும் என்று கூறியுள்ளது.
- உலக நாடுகள் பல பணவீக்கத்தால் பாதிக்ககப்படும் என்றும், மக்களின் வாங்கும் சக்தியை இது பாதிக்கும் என்றும். அதிக கடன் வாங்கும் நிலை, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கும் என்றும் ஐஎம்எப் கூறியுள்ளது.
- மத்தியப் பிரதேச மாநிலம் கஜுரஹோவில் 2023-ம் ஆண்டுக்கான ஹெலி உச்சி மாநாட்டை மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது ஆர்.சி.எஸ் உடான் 5.2 மற்றும் ஹெலிசேவா-செயலியையும் திரு சிந்தியா அறிமுகப்படுத்தினார்.
- மத்தியப் பிரதேச அரசு, பவன் ஹான்ஸ் லிமிடெட் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி) ஆகியவற்றுடன் இணைந்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் 5 வது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமான உச்சிமாநாடு (ஹெலி உச்சி மாநாடு 2023) ஏற்பாடு செய்யப்பட்டது.
- “கடைசிப்பகுதியையும் அடைதல்:ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய வகை விமானம் மூலம் மண்டலப் போக்குவரத்து தொடர்பு” என்பது இந்த நிகழ்வின் மையப்பொருளாகும். நிகழ்வில் ஒரு தொடக்க அமர்வும், அதைத் தொடர்ந்து ஒரு தொழில்நுட்ப அமர்வும் இருக்கும்.