17th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜெய்சங்கர் உட்பட 11 பேர் ராஜ்யசபாவுக்கு தேர்வு
- ராஜ்யசபாவில் மேற்கு வங்கத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆறு பேர், குஜராத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர், கோவாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒருவர் உட்பட, 10 பேரின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது.
- இதையடுத்து, இந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, வரும், 24ல் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. குஜராத்திலிருந்து பா.ஜ., சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாபுபாய் தேசாய், கேசரி தேவ் சிங் உட்பட மூன்று பேர் போட்டியிட்டனர்.
- இந்நிலையில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ஜெய்சங்கர் உட்பட மூன்று பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.இதேபோல் கோவாவில் இருந்து பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்ட சதானந்த் தண்டவதேயை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, அந்த கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரயன் உட்பட ஐந்து பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
- பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ஆனந்த் மஹாராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே ராஜ்யசபாவின் ஒரு இடத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஷாகேத் கோகலே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக, 11 பேர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ரூ.800 கோடி மதிப்பிலான ராணுவ வாகனங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஹிந்துஜா குழுமத்தில் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தில், எஃப்ஏடி (ஃபீல்ட் ஆா்ட்டிலரி டிராக்டா்), ஜிடிவி (கன் டோவிங் வெஹிக்கில்) ஆகியவற்றின் கொள்முதலும் அடங்கும். இந்த வாகனங்கள் இன்னும் 12 மாதங்களில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
- இந்திய ராணுவம் பயன்படுத்துவதற்கேற்ப பல்வேறு வாகனங்களை அசோக் லேலண்ட் வடிவமைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் மானியத்துடன் கூடிய கடலைப் பருப்பு விற்பனையை 'பாரத் பருப்பு' என்ற பெயரில் தொடங்கி வைத்தார். இந்தப் பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், 30 கிலோவாக வாங்கும்போது ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
- தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு வழங்படவுள்ளதோடு, நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.
- கடலைப்பருப்பு இந்தியாவில் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் ஒன்றாகும். துவரம்பருப்புக்கு மாற்றாக வறுத்த கடலைப் பருப்பு பயன்படுத்தப்படுகிறது.
- இரத்த சோகை, சர்க்கரை போன்றவற்றை கட்டுப்படுத்தவும் கடலைப்பருப்பு பயன்படுத்தப்படுகிறது. உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி போன்ற பல ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.
- புதுதில்லியில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மண்டல மாநாட்டிற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்.
- மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்புப்படை ஒருங்கிணைப்புடன் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு மூலம் சாதனை அளவாக ஒரே நாளில் ரூபாய் 2,378 கோடி மதிப்பிலான 1.40 லட்சம் கிலோ கிராமுக்கு மேலான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டது.