15th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கலைஞர் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மதுரை புதுநத்தம் சாலையில் சொக்கிகுளத்தில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா நலத் திட்டத்தில் இணைக்கப்பட்ட இந்த நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
- நூலகத்தின் வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி சிலையை முதல்வர் திறந்து வைத்தார். கருணாநிதி உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- பின்னர் மாலை 5.04 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ரிப்பன் வெட்டி முதல்வர் திறந்து வைத்தார். அமைச்சர்களுடன் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார் ஆகியோரும் உடனிருந்தனர்.
- நூலக வரவேற்பரை அருகேயிருந்த கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார். நூலகத்தின் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மதுரையின் பழமை, வளர்ச்சியை காட்டும் புகைப்படக் காட்சிகளை முதல்வர் பார்வையிட்டார்.
- கீழடி அருங்காட்சியக் காட்சிகள், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் இளைஞர் சிலையை ஆர்வத்துடன் முதல்வர் பார்வையிட்டார்.
- டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தரையில் முதல்வர் அமைச்சர்களுடன் நடந்து ரசித்தார். அந்த அறையில் இருந்த இருக்கையில் யார் அமர்ந்தாலும் அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அருகே அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் தொழில்நுட்பத்தை முதல்வர் கண்டு ரசித்தார்.
- அந்த இருக்கையில் முதல்வரும், அமைச்சர் துரைமுருகனும் அமர்ந்தபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவத்துடன் சில விநாடிகள் அவர்கள் பேசுவது போல திரையில் தெரிந்தது.
- 30 நிமிடங்களுக்கும் மேல் நூலகத்தின் அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்ட முதல்வர், அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில் தனது வாழ்த்துகளை பதிவு செய்தார். 'மதுரையில் இந்த நூலகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். கலைஞர் வழியில் அயராது உழைப்பேன், வாழ்த்துகள்' என பதிவு செய்தார்.
- தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4-வது நாள் போட்டியின்போது 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
- இதில் இந்தியாவின் ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வர்யா மிஸ்ரா, அமோஜ் ஜேக்கப், சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய கலப்பு அணி 3.14.70 விநாடிகளில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.
- மேலும் இந்தப் பிரிவில் தேசிய சாதனையையும் இவர்கள் உடைத்தனர். முந்தைய தேசிய சாதனை 3.15.71 விநாடிகளாக இருந்தது. மேலும், உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் சர்வேஷ் ஏ. குஷாரே 2.26 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
- மகளிர் ஹெப்டத்லான் பிரிவில் 5,840 புள்ளிகளைக் குவித்த இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
- ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 2-வது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் 2024-ம் ஆண்டு பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் முரளி சங்கர் தகுதி பெற்றார்.
- இதே பிரிவில் சீன தைபே வீரர் யு தாங் லின் முதலாவது இடம் பிடித்து தங்கம் வென்றார். யு தாங் லின் 8.40 மீட்டர் தாண்டினார். முரளி ஸ்ரீசங்கர் 8.37 மீட்டர் தாண்டி 2-வது இடத்தைப் பிடித்தார். சீன வீரர் மிங்குன் ஜாங் 3-வது இடத்தைப் பெற்றார்.
- 400 மீட்டர் ஆடவர் தடை ஓட்டத்தில் இந்திய வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான டி.சந்தோஷ் குமார் 3-வதாக வந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
- பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதலில் பிரான்ஸ் சென்ற அவர் அங்கு 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார்.
- அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பான முறையில் வரவேற்றார்.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அதிபர் மாளிகையில் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை இந்திய தேசியக்கொடி அசைத்து குழந்தைகள் வரவேற்றனர்.
- அதன்பின் அதிபருடனான சந்திப்பில் எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இரு நாடுகளும் இந்திய ரூபாய் மற்றும் யுஏஇ நாணயம் அடிப்படையில் வர்த்தகம் நடத்த ஒப்புக்கொண்டன.
- இதன் அடிப்படையில் இரு நாடுகளின் கரன்சிகளில் வர்த்தகம் நடத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.