12th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதி ரூ.450 கோடி ஒதுக்கீடு
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
- மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.
- சமீபத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், நேற்று 22 மாநில அரசுகளுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7,532 கோடியை வழங்கியுள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 22 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிதியில் அதிகபட்சமாக மராட்டியத்திற்கு ரூ.1,420.80 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.712 கோடியும், ஒடிசா மாநிலத்திற்கு ரூ. 707.60 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
- இந்த நிதி பேரிடர்காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பெரிதும் உதவும். அதேபோல் பேரிடர் காலத்தை எதிர்கொள்ள உதவிக்கரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
- ஜூன் மாதத்திற்கான நாட்டின் சில்லறை பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. இதில், நுகர்வோர் விலை குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 4.81 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- 3 மாதத்திற்குப் பிறகு மீண்டும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சில்லறை பணவீக்கம் 5.66 சதவீதமாகவும், கடந்த மே மாதம் 4.31 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கனமழையால் நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்ததால் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் மாதத்தில் உணவு பணவீக்கம் 4.49 சதவீதமாக இருந்தது. இதுவே மே மாதத்தில் 2.96 சதவீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் பணவீக்கம் 4.72 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 4.96 சதவீதமாகவும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உணவுப் பணவீக்கம் கிராமப்புறங்களில் தேசிய சராசரியை விட சற்றே அதிகமாக இருந்தது.
- உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றதால் தற்போது 30 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதையடுத்து தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் கூடிய கொலிஜியம், தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் பூயான், கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கடநாராய பாட்டி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஜூலை 5ம் தேதி பரிந்துரை செய்தது. இதை ஒன்றிய அரசு ஏற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.